BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள குரல் அழைப்பு திட்டங்கள் பற்றி இங்கே காணலாம்.

ட்ராய் (TRAI) உத்தவின்படி, முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாய்ஸ் ஒன்லி மற்றும் எஸ்.எம்.எஸ். திட்டங்களை அறிமுகம் செய்தது. பி.எஸ்.என்.எல். நிறுவனமும் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) டெலிகாம் நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களில் வாய்ஸ் கால்களுக்கு (குரல்வழி அழைப்புகளுக்கு) மட்டுமான திட்டங்களை மீண்டும் அறிமுகப்படுத்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
இதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் சில திருத்தங்களையும் மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து, ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள், டேட்டா இல்லாமல் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் வசதிக்கு மட்டுமான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்தன. இப்போது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
பி.எஸ்.என்.எல். திட்டங்கள்:
’voice and SMS-only’ திட்டங்களில் ரூ.439-க்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் & எஸ்.எம்.எஸ். 90 நாட்களுக்கு.. இது ஜியோவில், 84 நாட்களுக்கு ரூ.448 விலையில் கிடைக்கிறது.
- BSNL: ரூ.439 - 90 நாட்கள் – unlimited calls + 300 SMS
- ஜியோ: ரூ.448 - 84 நாட்கள் – unlimited calls + 1000 SMS / ரூ.1,748 -336 நாட்கள் – unlimited calls + 3600 SMS
- ஏர்டெல்: ரூ.469 - 84 நாட்கள் – unlimited calls + 900 SMS / ரூ.1849 - 365 days – unlimited calls + 3600 SMS
- Vi: Rs 470 - 84 நாட்கள் – unlimited calls + 900 SMS / ரூ.1460 - 270 days – unlimited calls + 100 SMS/day
ஜியோவின் வாய்ஸ் ஒன்லி திட்டங்கள்
ரூ.458 மற்றும் ரூ.1,958 மதிப்பிலான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.458 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள். இதில் நீங்கள் இலவச அழைப்பு மற்றும் மொத்தம் 1000 SMS கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.1,958 திட்டமானது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில் இலவச அழைப்பு மற்றும் மொத்தம் 3,600 SMS கிடைக்கிறது. அதேநேரம், ஜியோவில் குறைந்தபட்சமாக 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 299 ரூபாய் திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்தால், நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி டேட்டா, நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் கால் ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் வாய்ஸ் ஒன்லி திட்டங்கள்:
ஏர்டெல் ரூ.509 திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு மற்றும் 900 எஸ்.எம்.எஸ்.-களை 84 நாட்களுக்கு வழங்குகிறது. ரூ.1,999 திட்டத்தில் பயனர்கள் அன்லிமிடெட் குரல் அழைப்பு மற்றும் 3,000 எஸ்.எம்.எஸ்.-கள் ஒரு ஆண்டிற்கு செல்லுபடியாகும். அதேநேரம், ஏர்டெல்லில் குறைந்தபட்சமாக 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 349 ரூபாய் திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்தால், நாள் ஒன்றிற்கு 2 ஜிபி டேட்டா, நாள் ஒன்றிற்கு 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் உடன் கிடைக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

