பால் டேம்பரிங்கில் ஈடுபட்ட சி.எஸ்.கே?...ருதுராஜ் பாக்கெட்டில் மறைத்து வைத்த பொருள் என்ன?
மும்பை சென்னை அணி இடையிலான ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி பால் டேம்பரிங்கில் ஈடுபட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ பரவி வருகிறது

சி.எஸ்.கே Vs மும்பை
2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டி கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டி பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணியிடையே நடைபெற்றது. இரண்டாவது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே நடைபெற்றது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த மும்மை மற்றும் சென்னை இடையிலான ஐ.பி.எல் போட்டி நேற்ற் மார்ச் 23 நடைபெற்றது.
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்து 155 ரன்களில் மும்பை அணியை சுருட்டியது. எளிதாக இலக்காக இருந்தபோதும் சென்னை அணி வழக்கம்போல் கடைசி ஓவர் வரை இந்த மேட்சை எடுத்துச் சென்றது.
தோனிக்கு பிரம்மாண்ட வரவேற்பு
ரன் சேசிங்கை சென்னை அணி சிறப்பாக தொடங்கினாலும் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தது வெற்றியை சவாலாக்கியது. ஆனால் ரசிகர்கள் அதை பெரிதாக கவலைப்படாமல் தோனி பேட்டிங் வருவதற்கு காத்திருந்தார்கள். தோனி களத்திற்கு வர பாடல்களை ஒலிக்கவிட்டு சேப்பாக்கம் மைதானம் அதிர்ந்தது.
பால் டேம்பரிங்கில் ஈடுபட்டதா சி.எஸ்.கே
இறுதியில் 5 பந்துகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது. ஒருபக்கம் ரசிகர்கள் சி.எஸ்.கே அணியின் முதல் வெற்றியை கொண்டாடி வரும் நிலையில் போட்டியின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. போட்டியின் போது பந்துவீச்சாளர் கலீல் அகமத் ஒரு பொருளை மறைத்து வைத்து ருதுராஜிடம் கொடுக்க அதை ருது வாங்கி தனது பாக்கெட்டிற்குள் போட்டுக் கொள்கிறார். இதனால் சி.எஸ்.கே பால் டேம்பரிங்கில் ஈடுபட்டதா என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ருதுராஜ் மறைமுகமாக தனது பாக்கெட்டில் வைத்த பொருள் என்னவென்ற கேள்வி எழுந்துள்ளது.
Ball tampering now? 🤡
— Ayush (@itsayushyar) March 24, 2025
-Home matche knowing MI’s captain won’t be available.
-Uncapped player rule.
-2nd ball in 2nd innings so spinners can grip better.
-Everything seems well planned. 😭
Ban this shameless franchise for 2 more years!" pic.twitter.com/XKn8DI0m3q
இன்னும் சில கலீல் அகமத் கையில் அணிந்திருந்த பேண்டேஜை தான் ருதுராஜ் வாங்கி தனது பாக்கெட்டிற்குள் போட்டதாக கூறுகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

