ஸ்டார்ட் செய்த விஜய்! திமுகவுக்கு எதிராக மாஸ்டர் பிளான்..மாவட்ட செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்திற்கு வரும் நிர்வாகிகள், அப்பகுதிகளில் உள்ள குறைகளை அறிக்கையாக சமர்பிக்குமாறு விஜய் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்.

தவெக தலைவர் விஜய், திமுகவுக்கு எதிராக வலுவான கருத்தை முன்வைக்கும் வகையில், ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள குறைகளை அறிக்கையாக சமர்பிக்குமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி, கடைக்கோடி மக்களிடம் வரை சென்று, திமுகவுக்கு எதிராக நெருக்கடியை கொடுக்கும் வகையில் நேர்த்தியான திட்டத்தில் விஜய் இறங்கியுள்ளார்.
கட்சியை பலப்படுத்தும் விஜய்:
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகளை, தொடர்ந்து விமர்சித்து வருகிறார் விஜய். ஆளும் கட்சிகளுக்கு எதிராக விமர்சனங்களை விஜய் வைத்து வந்தாலும், வலுவாக வைப்பதில்லை என்ற கருத்துகள் எழுந்து வருகிறது. மேலும், கட்சிகளை அடிமட்ட அளவில் எடுத்துச் செல்ல, விஜய் இன்னும் முனைப்பு காட்டாமல் இருக்கிறார் என்றும், மக்களை களத்தில் சந்திக்காமல் ஆன்லைன் அரசியல் செய்து வருகிறார் என்றும் விஜய் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
இந்நிலையில்தான், கட்சிகளை வலுப்படுத்தும் நோக்கில் மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை தவெக எட்டியிருக்கிறது. 234 சட்டப்பேரவை தொகுதிகளை 120 மாவட்டங்களாக பிரித்து மாவட்ட நிர்வாகிகளை நியமித்து வந்த நிலையில், மேலும் மாவட்ட நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்த திட்டமிட்டிருக்கிறார். இதன் மூலம் அடிமட்ட அளவிலும், தவெகவின் இருப்பு இருக்கும் என்றும், கட்சிகளை பலப்படுத்தும் பணி முடுக்கி விடப்படும் என திட்டமிட்டுள்ளார் விஜய்.
Also Read: TVK 4Th List: 4ம் கட்ட தவெக பட்டியலை வெளியிட்ட விஜய்.! மேலும் 19 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்...
Also Read: தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்
மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தல்கள்
இந்த தருணத்தில், தவெகவின், முதல் பொதுக்குழு கூட்டம் வருகிற மார்ச் 28 ஆம் தேதி விஜய் தலைமையில் திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படி செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஒவ்வொரு பகுதிகளில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளது, அப்பகுதி மக்களின் குறைகள் உள்ளிட்டவற்றை அறிக்கையாக மாவட்ட நிர்வாகிகள் தயாரித்து, அதை வரும் பொதுக்குழு கூட்டத்தில் சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கியிருக்கிறார், விஜய்.
விஜய் சாதுர்யம்:
இந்த அறிக்கைகளை வைத்துதான், விஜய் சாதுர்யமான திட்டத்தை , திமுக எதிராக எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் பொதுமக்களை நேரில் சந்திப்பது இல்லை என விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, நிர்வாகிகளிடம் பெற்ற அறிக்கைகளை மக்கள் முன் பேச உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஆளும் கட்சியான திமுகவுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்த விஜய் பக்கா திட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வரும் மார்ச் 28 ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும், இது தொடர்பாக ஆலோசனை வழங்குவது மட்டுமன்றி, நிர்வாகிகளிடமும் ஆலோசனை பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

