மேலும் அறிய
பெரம்பலூர் அம்மாபாளையத்தில் அரசு ஊழியர் வீட்டில் 36 நகை, பணம் கொள்ளை
சுப்பிரமணியன் வீட்டில் கொள்ளையடித்த நகைகள் இருந்த பெட்டிகளை, அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள வயலில் மர்மநபர்கள் வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர்
கொள்ளை சம்பவம் நடந்த வீடு
பெரம்பலூர் மாவட்டம் அருகே உள்ள அம்மாபாளையம் தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (57). இவருக்கு லோகாம்பாள் என்ற மனைவியும், அன்பரசி, மங்கையர்கரசி ஆகிய 2 மகள்களும், வேல்முருகன் என்ற மகனும் உள்ளனர். சுப்பிரமணியன் சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். மகள்கள் 2 பேரையும் அம்மாபாளையத்திலேயே திருமணம் செய்து கொடுத்துள்ளார். மகனுக்கு திருமணமாகி கோவையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இதனால் ஒரே வீட்டில் சுப்பிரமணியன் தனது மனைவி மற்றும் தனது தந்தையான பள்ளி இரவு நேர காவலராக பணியாற்றி ஓய்வுபெற்ற நாராயணன் (82) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியன் செஞ்சேரி- செட்டிகுளம் சாலையில் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த 10 நாட்களாக மனைவியுடன் அங்கேயே தங்கி உள்ளார். இதனால் அம்மாபாளையத்தில் உள்ள வீட்டில் முன்பக்க அறையில் நாராயணன் தனியாக வசித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று காலை 8 மணியளவில் மங்கையர்கரசி தனது தாத்தாவுக்கு உணவு கொண்டு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் உடனடியாக தனது தந்தை சுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த சுப்பிரமணியன் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தார். அப்போது ஒரு அறையில் பீரோக்களில் வைத்திருந்த மொத்தம் 36.75 பவுன் நகைகள் மற்றும் 55 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து அவர், பெரம்பலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது சுப்பிரமணியன் வீட்டில் கொள்ளையடித்த நகைகள் இருந்த பெட்டிகளை, அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள வயலில் மர்மநபர்கள் வீசிவிட்டு தப்பி சென்றிருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் . இந்த கொள்ளை சம்பவம் நடந்த வீட்டின் அருகில் வசிப்பவர்களிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சந்தேகப்படும்படி யாராவது அந்த பகுதியில் நடமாடினார்கலா என்பதை அருகில் உள்ள மக்களிடம் கேட்டறிந்து வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களில் காட்சிகளை கொண்டு விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக யாரும் தெரியாத நபர்களிடம் தொடர்ந்து பேச வேண்டாம், வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் என அறிவுரை வழங்கி உள்ளனர். மேலும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement