7 Seater Car: 7 சீட்டு கார்கள்.. அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய்தான்.. கியா முதல் மஹிந்திரா வரை!
7 Seater Car: ரூபாய் 6 லட்சம் முதல் ரூபாய் 15 லட்சம் வரை 7 சீ்ட்டுகளை கொண்ட சிறப்பான கார்களின் பட்டியலை கீழே காணலாம்.

7 Seater Car: இந்தியாவில் கார்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடுத்தர வர்க்கத்தினரும் பயன்படுத்தும் வகையில், அவர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்றாற்போல பல்வேறு வசதிகளுடன் கார்களை முன்னணி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றனர். பெரிய குடும்பங்களின் வசதிக்காக 7 சீட்டுகளை கொண்ட பட்ஜெட்டில் கட்டுப்படியாகும் கார்களின் பட்டியலை கீழே காணலாம்.
1. Renault Triber:
ரெனால்ட் நிறுவனத்தின் 7 சீட்டுகளை கொண்ட கார் ரெனால்ட் ட்ரைபர். இந்த கார் சிவப்பு, கருப்பு, நீலம் உள்பட 6 கார்கள் வருகிறது. இந்த கார் ஆட்டோமெட்டிக் கியர் வசதி கொண்டது. 999 சிசி எஞ்ஜின் திறன் கொண்டது இந்த கார் ஆகும். இந்த கார் பெட்ரோலில் இயங்கும் திறன் கொண்டது ஆகும். 72 பிஎச்பி குதிரை திறன் கொண்டது ஆகும். இந்த காரின் விலை ரூபாய் 6.3 லட்சம் முதல் ரூபாய் 9.17 லட்சம் வரை ஆகும்.

2. Maruti Ertiga:
மாருதி சுசுகி நிறுவனத்தின் பட்ஜெட் தயாரிப்பு கார் இந்த எர்டிகா. பெரிய குடும்பத்தினரின் வசதிக்காக 7 பேர் அமரும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 1462 சிசி எஞ்ஜின் திறன் கொண்டது ஆகும். 139 என்எம் திறன் கொண்டது ஆகும். இந்த கார் பெட்ரோலில் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூபாய் 9.12 லட்சம் முதல் ரூபாய் 13.41 லட்சம் வரை ஆகும்.
3. Mahindra Bolero:
மஹிந்திரா நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பு இந்த பொலிரோ. 7 சீட்டுகளை கொண்ட கம்பீரமான தோற்றத்தில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. 76 எச்.பி. குதிரைத் திறன் கொண்ட இந்த கார் டீசலில் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எஞ்ஜின் 1493 சிசி திறன் கொண்டது ஆகும். இந்த கார் ரூபாய் 9.81 லட்சம் முதல் ரூபாய் 10.93 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
4. Mahindra Bolero Neo:

மஹிந்திரா பொலிரோ காரின் சற்று மேம்படுத்தப்பட்ட மாடல் இந்த மஹிந்திரா பொலிரோ நியோ மாடல் ஆகும். இந்த கார் 1000 எச்.பி. குதிரை திறன் கொண்டது ஆகும். இந்த காரும் டீசலில் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் எஞ்ஜின் 1493 சிசி திறன் கொண்டது ஆகும். 260 என்.எம். இழுதிறன் கொண்டது ஆகும். இந்த காரின் விலை ரூபாய் 9.97 லட்சம் முதல் ரூபாய் 12.18 லட்சம் வரை ஆகும். 7 சீட்டுகளை கொண்ட இந்த கார் சொகுசாக செல்ல ஏற்ற கார் ஆகும்.
5. Toyota Rumion:
புகழ்பெற்ற டொயோட்டா காரின் மாடல்களில் ருமியன் ஒன்றாகும். மாருதி எர்டிகாவை அடிப்படையாக கொண்டு இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 103 எச்பி குதிரை திறன் கொண்டது ஆகும். பெட்ரோலில் ஓடும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூபாய் 10.67 லட்சம் முதல் 13.96 லட்சம் வரை மாடலுக்கு ஏற்ப விற்கப்படுகிறது. இந்த காரின் எஞ்ஜின் 1462 சிசி திறன் கொண்டது ஆகும்.
6. Kia Carens:

இந்தியாவில் தற்போது கோலோச்சி வருவது கியா நிறுவனத்தின் கார்களே ஆகும். கியாவின் காரென்ஸ் கார் 7 சீட்டுகளை கொண்ட கார் ஆகும். பயணிகளின் வசதிக்கு ஏற்ப இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 115 எச்பி திறன் கொண்டது ஆகும். பெட்ரோலில் ஓடும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எஞ்ஜின் 1497 சிசி ஆகும். இந்த காரின் விலை ரூபாய் 11.41 லட்சம் ஆகும்.





















