Tiruvannamalai: தி.மலை மண்சரிவில் சிக்கிய 7 பேரும் பலி.! தீபமலையில் நடந்த சோகம்.!
Tiruvannamalai LandSlide: திருவண்ணாமலை தீபமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவில், இதுவரை 5 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை தீபமலையில் பல இடங்களில் மண் சரிவானது ஏற்பட்டுள்ள நிலையில், சிக்கியவர்களை மீட்கும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயலானது, நேற்றைய முன்தின இரவு காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. இதையடுத்து , புயலானது புதுச்சேரி , விழுப்புரம் நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, திருவண்ணாமலை நோக்கி நேற்றைய தினம் நகர்ந்தது.
இதனால் , திருவண்ணாமலையில் கனமழையானது பெய்தது, மேலும் ஒருசில இடங்களில் அதிகனமழையும் பெய்தது. நேற்றைய தினத்தில் மட்டும் 20 செ.மீ வரை மழை பெய்ததாக தகவல் தெரிவிக்கின்றன.
7 பேர் சிக்கி தவிப்பு:
இந்நிலையில் திருவண்ணாமலை தீபமலையில் பல இடங்களில் மண் சரிவானது ஏற்பட்டுள்ளது. இங்குதான் கார்த்திகை தீபமானது ஏற்றப்படும். சுமார் 1000 அடி தூரத்தில் மண்சரிவால், பாறைகள் தாழ்வுப்பகுதிக்கு வந்து, பல வீடுகள் மீது சரிந்தது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் மண் சரிவால் ஏற்பட்ட இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்து மணி நேரமாக மீட்டு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் ,மீட்பு பணிக்கு இடையூறாக மழை பெய்துவருகிறது. pic.twitter.com/mmyu1gIe0u
— AIR News Trichy (@airnews_trichy) December 2, 2024
இருவரின் உடல் மீட்பு:
இதனால் நேற்று ஒரு வீட்டில் இருந்த 5 சிறுவர்கள் உட்பட 7 பேர். மலைச்சரிவில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்நிலையில், சிக்கியவர்களை மீட்கும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டது.
சிக்கியவர்களில் ராஜ்குமார் - மீனா தம்பதி ஆகிய இருவர், அவர்களின் குழந்தைகள் இருவர் மற்றும் பக்கத்து வீட்டு குழந்தைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் என தகவல் தெரிவிக்கின்றன.
மீட்பு பணிகள் 18 மணிநேரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது 5 பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இருவரின் உடல்கள் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மீட்பு பணி நடைபெறும் இடத்தில் மழை பெய்து வருவதால் சிக்கல்கள் நீடிப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
Also Read; School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?