மேலும் அறிய
Karthigai Deepam : சிவனிடம் சரணாகதி.. திருவண்ணாமலை மகாதீபம் கொடியேற்றத்துடன் தொடங்கியது..
Tiruvannamalai Karthigai Deepam festival 2024 : " திருக்கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது "
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் கொடியேற்று விழா
1/8

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக திகழ்ந்து வருகிறது.
2/8

நினைத்தாலே முக்தி தரும் தலங்களில் ஒன்றாக திருவண்ணாமலை இருந்து வருகிறது. கார்த்திகை மாதம் என்றாலே அனைவருக்கும் திருவண்ணாமலை நினைவுக்கு வந்துவிடும். கார்த்திகை மாதம் வரும் திருகார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
3/8

அண்ணாமலையார் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
4/8

இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு உன்னாமலை அம்மனுடன் அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைப்பெற்றது.
5/8

டிசம்பர் 10 ஆம் தேதி - காலை உற்சவம் - காலை 6 மணிக்கு மேல் 6:48 மணிக்குள் விருச்சக லக்னத்தில் விநாயகர் தேர்வு படம் பிடித்தல். பஞ்ச மூர்த்திகள் - மகாராதங்கள் - தேரோட்டம்.
6/8

டிசம்பர் 11 ஆம் தேதி - காலை உற்சவம் - விநாயகர் ,சந்திரசேகர் - குதிரை வாகனம். மாலை உற்சவம் - 4:30 மணிக்கு பிச்சாண்டவர் உற்சவம் : இரவு உற்சவம் - பஞ்ச மூர்த்திகள் - குதிரை வாகனம்
7/8

டிசம்பர் 12 ஆம் தேதி -காலை உற்சவம் - விநாயகர் , சந்திரசேகர் - புருஷா முனி வாகனம் இரவு உற்சவம் - பஞ்ச மூர்த்திகள் - கைலாச வாகனம் காமதேனு வாகனம்.
8/8

டிசம்பர் 13 ஆம் தேதி -அதிகாலை 4 மணிக்கு பரணி தீப தரிசனம். மாலை 6:00 மணிக்கு மகா தீப தரிசனம்.
Published at : 04 Dec 2024 07:39 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement




















