School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: தமிழ்நாட்டில் நாளை விழுப்புரம், திண்டிவனம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதிகனமழை:
ஃபெஞ்சல் புயலானது காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ந்து சென்றது. இதனால் விழுப்புரத்தில் அதிகனமழையானது கொட்டித் தீர்த்தது. மேலும் , ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து , திருவண்ணாமலை நோக்கி சென்று விட்டது.
இந்நிலையில், விழுப்புரத்தில் பல்வேறு பகுதிகளில் அதீத வேக காற்று மழையால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின.இதனால் சில சாலைகள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் , வெள்ளநீரால் விழுப்புரம் -செஞ்சி இடையிலான சாலைப் போக்குவரத்தானது பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இதையடுத்து, அங்கு வெள்ள நிவாரண பணிகளில் அரசாங்கம் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
9 மாவடங்களில் விடுமுறை:
இந்த தருணத்தில் , நாளை கடலூர், கள்ளக்குறிச்சி விழுப்புரம் மற்றும் திண்டிவனம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராணிப்பேட்டை, சேலம், வேலூர், தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சிதம்பரம் அண்ணமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
Also Read: Puducherry Leave:புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! அங்கு நிலைமை எப்படி?
அடுத்த ஏழு தினங்களுக்கு வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை.
01-12-2024:
வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் ஒருசில இடங்களில் சுன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
02-12-2024:
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், 'திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
03-12-2024:
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
04-12-2024:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
05-12-2024 முதல் 07-12-2024 :
வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.