திமுக அரசு ஒரு வருடத்துக்குள், மக்கள் செல்வாக்கை இழந்து செல்லா காசானது - கிருஷ்ணசாமி பேச்சு
”திமுக சொல்வதையெல்லாம் ஒரு காலத்தில் நம்பிக் கொண்டு இருந்தனர். வரக்கூடிய தேர்தலில் திமுக வரலாறு காணாத அளவிற்கு தோல்வியை தழுவும், திமுகவின் முடிவு காலத்திற்கான தொடக்கம் ஆரம்பித்துவிட்டது”
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நேற்றைய தினம் மதுரை விமான நிலையத்தில் இருந்து நெல்லை நோக்கி வரும்போது என்னுடைய வாகனம் காவல் துறையால் தனித்து விடப்பட்டது. நேற்று அஞ்சலி நிகழ்ச்சியில் கலவரம் ஏற்படுத்தி தாக்குதல் நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. திராவிடம் என்று சொன்னாலே பிரிவினைவாதம், தேச விரோதமானது என்பதை புதிய தமிழக கட்சி அம்பலப்படுத்தியதால் அந்த கோபத்தை புதிய தமிழகம் கட்சி மீது திமுக காட்டுகிறது. ஸ்டாலின் திமுக அரசு அதை நிறுத்திக் கொள்ள வேண்டும். சட்டத்தின்படி ஆட்சி நடத்த வேண்டும். மீறினால் நாங்களும் சட்டத்துக்கு புறம்பாக நடக்கக்கூடிய ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கூற வேண்டியது இருக்கும்.
பொதுவாக ஆளுங்கட்சி மீது மூன்று ஆண்டுகள் நான்காண்டுகள் கழித்து தான் மக்களுக்கு வெறுப்பு ஏற்படும். ஆனால் திமுக அரசு 505 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்திருந்தனர் ஆனால் உண்மையாக ஐந்து கோரிக்கைகள் கூட நிறைவேற்றவில்லை. அத்தனையுமே பொய்யும் புரட்டுமாக கூறி, திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. இதனால் ஒரு வருடத்துக்குள்ளாகவே திமுக அரசு முழுமையாக மக்கள் செல்வாக்கை இழந்து செல்லா காசாகிவிட்டது. திமுக அரசு தனது தோல்வியை மறைப்பதற்காக அல்லது திராவிட மாடலை தேசவிரோதம் என்பதை மூடி மறைப்பதற்காக எங்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு முயற்சிப்பதை நேரடியாக சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம்.
பொதுமக்களுக்கோ பொது சொத்துக்களுக்கோ எந்த இடையூறும் இல்லாமல் புதிய தமிழகம் கட்சி தங்களது கூட்டங்களை நடத்துகிறது, நடத்தும். புதிய தமிழகம் கட்சியின் எந்த நிகழ்ச்சிக்கும் தேவை இல்லாமல் காவல்துறை தடை செய்வதை தவிர்த்திட வேண்டும் என்று இந்த நேரத்தில் கோரிக்கையாகவும் எச்சரிக்கையாகவும் வைக்கிறேன்.
திமுக அரசு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை திட்டமிட்டு நீட் தேர்வு எதிராக குரல் கொடுத்த முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இருவரும் நீட் தேர்வு எதிர்த்த நிலையில் இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வும் நடந்து விட்டது. இந்த விஷயத்தில் தமிழக அரசு தோற்று விட்டது. தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வு எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும். திமுக அரசு ஒரு வருடத்தில் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது. திராவிட அரசியல் எனக் கூறி அதற்கு எதிராக செயல்படும் புதிய தமிழகம் கட்சியின் செயல்பாடுகளை எதிர்க்குமானால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுக்க தயாராவோம்.
ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேட்டில் முதல்வர் மற்றும் அவரது மருமகன் குறித்து புகார்கள் கூறப்பட்ட நிலையில், முதல்வரோ மருமகனோ ஏன் விளக்கம் கொடுக்கவில்லை. அவர்களுக்கு தொடர்பில்லை என்றால் விளக்கம் கொடுத்து இருக்க வேண்டும் அல்லவா? திமுக கட்சியின் 505 வாக்குறுதியை நம்பி தான் மக்கள் சட்டமன்றத்திற்கு வாக்களித்தார்கள். அதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். திமுக அரசு நிதி இல்லை என்றால் சொன்னால் - இந்த அரசுக்கு நிதியும் இல்லை, மதியும் இல்லை என்றால் இந்த அரசு தொடர வேண்டிய அவசியம் இல்லை.
தமிழ் நாட்டில் மிகப்பெரிய கொள்ளை நடந்து வருகிறது, திமுகவின் மாவட்ட செயலாளர்கள் எல்லாம் கோடிஸ்வரர்கள் ஆகிக் கொண்டிருக்கின்றனர். எல்லா குளங்களிலும் மண் எடுக்க கதவு திறந்து விடப்பட்டு உள்ளது. ஒரு யூனிட் மண் தூர்வார 300 ரூபாய் மாவட்ட செயலாளர் வீட்டிற்கு செல்கின்றது. அப்படியென்றால் ஒரு நாளைக்கு எத்தனை கோடி ரூபாய் மாவட்ட செயலாளருக்கு செல்கிறது. எந்த ஊழலை ஒழிக்க வேண்டும் என்று குற்றம் சுமத்தி வந்தீர்களோ அதை விட ஆயிரம் மடங்கு ஊழலில் திளைக்கிறது. சமூக நீதி பேசும் நீங்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு அதனை ஆதரிக்கிறோ என்று சொல்லி இருக்க வேண்டும், முர்முவை ஏன் நீங்கள் ஆதரிக்கவில்லை, திமுக சொல்வதையெல்லாம் ஒரு காலத்தில் நம்பிக் கொண்டு இருந்தனர். வரக்கூடிய தேர்தலில் திமுக வரலாறு காணாத அளவிற்கு தோல்வியை தழுவும், திமுகவின் முடிவு காலத்திற்கான தொடக்கம் ஆரம்பித்துவிட்டது என்று பேசினார்