மேலும் அறிய

கைத்தறி பட்டுக்கு ஜிஎஸ்டி வரியை நீக்க கோரி கும்பகோணத்தில் நெசவாளர்கள் போராட்டம்

’’ஜிஎஸ்டி வரி விதிப்பதால், ஏழை நெசவு தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பெரும்பாலான நெசவு தொழிலாளர்கள், நெசவுத்தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு சென்று விட்டார்கள்’’

கைத்தறி பட்டு மற்றும் உற்பத்திப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும்  என்பதை வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு பட்டு கைத்தறி நெசவாளர்கள் மற்றும் பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து நெசவாளர் கூட்டமைப்பு குழு தலைவர் லெனின் தலைமை வகித்தார். பட்டு ஜவுளி உற்பத்தியாளர் சங்க செயலாளர் ராயாகோவிந்தராஜன் சிறப்புரையாற்றினார். இதில் பட்டு ஜவுளி உற்பத்தியாளர் சங்க தலைவர் கோகுல், நெசவாளர் கூட்டமைப்பு குழு செயலாளர் மோகன், சிஐடியூ நாகேந்திரன், தமாகா செல்வம் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள், தஞ்சாவூர், திருவாரூர், அரியலுார் மாவட்ட நெசவாளர்கள், பட்டு உற்பத்தியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கைத்தறி பட்டுக்கு ஜிஎஸ்டி வரியை நீக்க கோரி கும்பகோணத்தில் நெசவாளர்கள் போராட்டம்

இதில், கைத்தறி பட்டு நெசவுத்தொழிலுக்கு மத்திய அரசு விதித்துள்ள 12 சதவீத ஜிஎஸ்டி வரியை முழுவதும் விலக்க வேண்டும், வரலாறு காணாத வகயில் ஏறியுள்ள கச்சா பட்டு விலையை கட்டுப்படுத்த வேண்டும், கச்சா பட்டு இறக்குமதி செய்ய வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இறுதியில், கூட்டமைப்பு குழு பொருளாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார். இது குறித்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், சுபமுகூர்த்தன்று மணப்பெண் பட்டு சேலை உடுத்தி வந்தால் தான் பெருமை என்பது காலம் காலம் தொட்டு உள்ளது. ஒவ்வொரு முகூர்த்த நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதியில்தயாரிக்கும் பட்டு சேலைகள் வாங்கி செல்வார்கள். இந்த பழக்கம் இன்றளவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

கைத்தறி பட்டுக்கு ஜிஎஸ்டி வரியை நீக்க கோரி கும்பகோணத்தில் நெசவாளர்கள் போராட்டம்

பட்டு நெசவுத்தொழில் குடிசைத்தொழிலாக தான் உள்ளது. அதற்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதால், ஏழை நெசவு தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பெரும்பாலான நெசவு தொழிலாளர்கள், நெசவுத்தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு சென்று விட்டார்கள். தற்போது நெசவுத்தொழில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.   கும்பகோணம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இருந்த நிலையில், தற்போது நெசவுத்தொழில் முடக்கம் காரணமாக 50 சதவீதம் நெசவாளர்கள் தான் உள்ளார்கள். இதே நிலை நீடித்தால், சொற்ப அளவில் மட்டுமே நெசவாளர்கள் இருப்பார்கள். தற்போது, கச்சா பட்டின் விலை வரலாறு காணாத வகையில் உயந்துள்ளதால், பட்டு சேலை விலை அதிகரித்துள்ளதால், வாடிக்கையாளர்கள் வாங்குவது குறைந்து விட்டது. இதனால் சேலைகள் மற்றும் பட்டுத்துணிகள் அதிகளவில் தேக்கம் அடைந்து விட்டது.  கச்சா பட்டுவை, பெருமுதலாளிகள் பதுக்குவதை தடுத்தால் தான் பட்டு நெசவுத்தொழில் முன்னேற்றம் அடையும். இதில் மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், கும்பகோணத்திலுள்ள நெசவாளர்களின் நிலை கேள்வி குறியாகும்  என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget