தஞ்சாவூர்: பேராவூரணியில் வீடு வீடாக சென்று மாணவர்களை அழைத்த திருவள்ளுவர்
’’தஞ்சாவூர் மாவட்டத்தில் 1325 துவக்கப்பள்ளிகளும், 286 நடுநிலைப் பள்ளிகளும் என மொத்தம் 1611 அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்பட்டது’’
தஞ்சாவூர் மாவட்டத்தில் 19 மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வருகை தரும் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனா பாதிப்பின் தாக்கம் குறைய குறைய லாக்டவுன் கட்டுப்பாடுகளில் சிறிது சிறிதாக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு தமிழக அரசு ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகளில், அனைத்து ஆசிரியர்களும் இரண்டு தவனை கொரோனா தடுப்பூசிகள் போட்டிருக்க வேண்டும். மாணவர்கள் முக கவசம் அணிய வேண்டும். மாணவர்களுக்கு பள்ளி நுழைவு வாயிலில் உடலின் வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டும் நெறிமுறைகளை அறிவுறுத்தியிருந்தனர்.
அதில் இடம் பெற்றிருந்தன. கல்வி கற்றல் முறை இன்று முதல் 15 நாட்களுக்கு மாணவர்களுக்கு கதை, பாடல், ஓவியம் என மனமகிழ்வு செயல்பாடுகளை முதல் கட்டமாக ஆசிரியர்கள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஒரே நேரத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களும் அமராத வகையில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. அன்றைய தினம் வகுப்புகள் இல்லாத மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டியது இல்லை; விரும்பியவர்கள் ஆன்லைன் மூலமாக கல்வி கற்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 439 பள்ளிகளில் திறக்கப்பட்டு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து, . 1-ஆம் வகுப்பு முதல் 8 -ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1325 துவக்கப்பள்ளிகளும், 286 நடுநிலைப் பள்ளிகளும் என மொத்தம் 1611 அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவின்படி, தஞ்சாவூர் எம்பி, பழனிமாணிக்கம், லெட்சுமிநாராயணன் அரசு உதவி பெறும் பள்ளியிலும், கொறாடா கோவி.செழியன், தேப்பெருமாநல்லுார் அரசு பள்ளியிலும், எம்எல்ஏ துரைசந்திரசேகரன்,திருவையாறு சீனிவாசராவ் பள்ளியிலும், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், கும்பகோணம் தொகுதிக்குட்ப்பட்ட பல்வேறு பள்ளிகளிலும், பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலீவர், மாரியம்மன் கோயிலிலுள்ள ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியிலும் உள்ளிட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பள்ளிக்கு சென்று, 19 மாதங்களுக்கு பிறகு வரும் மாணவர்களுக்கு, பூங்கொத்து கொடுத்தும், இனிப்புகளை வழங்கி, வரவேற்றனர். மாணவ குழந்தைகளை மகிழ்விக்கவும், உற்சாகப்படுத்துவதற்காக பலூன் கொடுத்தும், டிரம்ஸ் இசை கச்சேரிகள், பபூன் வேடமிட்டு நடனமாடியபடியும் பள்ளியின் சார்பில் வரவேற்றனர். 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், பள்ளிக்கு வரும் மாணவ குழந்தைகளை வரவேற்கும் விதமாக, மிருகங்களின் உருவத்தை முகத்தில் வேடமிட்டு, கைகளை தட்டி, ஆராவாரத்தடன் வரவேற்றனர்.
இந்நிலையில், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், வளப்பிரமன்காடு ஊராட்சி, பனஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 11 மாணவர்கள் மட்டுமே படித்து வந்தனர். அதன் பிறகு தலைமையாசிரியராக சந்திரசேகரன் பொறுப்பேற்றவுடன், கொரோனா காலத்தில், வீடு வீடாக சென்று, மாணவர்களின் பெற்றோர்களிடம் பேசி, தற்போது 35 மாணவர்கள், இப்பள்ளியில் சேர்த்துள்ளார். அரசு பள்ளி மாணவர்கள் கௌரவிக்கும் வகையில், குழந்தைகளின் பெற்றோர் மகாராஜன், திருவள்ளுவர் போல் வேடமிட்டு, 35 மாணவர்களின் வீடுகளுக்கு, தலைமையாசிரியர் சந்திரசேகரன் ஆகியோர், நேரிடையாக சென்று, திருக்குறள் வாசித்து, பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப வேண்டும் என்று வித்தியாசமான முறையில் வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து, பள்ளிக்கூட வாயிலில், நின்று அனைத்து மாணவர்களுக்கும், தலைமையாசிரியர் சந்திரசேகரன், மாணவர்களை குஷிப்படுத்தும் விதமாக சால்வை அணிவித்து, இனிப்புகளை வழங்கினார். பின்னர் ஆசிரியர்கள், முன்னால் செல்ல மாணவர்கள், பின்னால் அணிவகுத்து சென்றனர்.