மேலும் அறிய
Advertisement
கெத்து காட்டுவதற்காக போலீஸ் ஸ்டேஷன் முன் பிறந்தநாள் கொண்டாட்டம் - நுரை பொங்கும் ஸ்பிரே அடித்து ரகளை
’’எப்பொழுதும் காவல் நிலையத்தின் வாசலில்தான் கேக் வெட்டுவோம் என்றும், நாங்கள் சிங்கிள் பசங்க அப்படிதான் இருப்போம்’’
கல்லூரி பயிலும் மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் நிலையத்தின் முன்பு டிக் டாக் செய்வது வீடியோ எடுப்பது, நடனமாடி இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வது போன்ற பல்வேறு செயல்களில் கெத்து காட்டுவதற்காக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நாகை வெளிப்பாளையம் காவல் நிலையம் முன்பு வந்த கல்லூரி மாணவர்கள் சிலர் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி ரகளையில் ஈடுபட்டனர். நாகை பாரதிதாசன் அரசு கல்லூரியில் பயிலும் வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற கல்லூரி மாணவனின் பிறந்தநாளைதான் காவல் நிலையத்தின் வாசலில் கொண்டாடி உள்ளனர்.
அவரது கல்லூரி நண்பர்கள். எந்தவிதமான அச்சமுமின்றி காவல் நிலையத்தின் முன்பு வந்த கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனத்தை நடுவில் நிறுத்தி அதன்மீது வைக்கப்பட்டு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியது மட்டுமல்லாமல் தலையில் நுரை பொங்க ஸ்பிரே அடித்துக் கொண்டு பிறந்தநாள் கொண்டாடுவதாக ரகளையில் ஈடுபட்டனர்.
கெத்து காட்டுவதற்காக காவல் நிலையத்தின் முன்பு நண்பனின் பிறந்தநாளை கொண்டாடுவதாக கூறிய கல்லூரி மாணவர்கள், காவல் நிலையத்தின் உள்ளே இருந்து காவலர்கள் பார்த்துக் கொண்டிருப்பதை சுதாரித்த பிறகும் எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் ஆர்வத்தோடு பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். எப்பொழுதும் காவல் நிலையத்தின் வாசலில்தான் கேக் வெட்டுவோம் என்றும், நாங்கள் சிங்கிள் பசங்க அப்படிதான் இருப்போம் என்றும் காவல் நிலையம் முன்பு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion