மேலும் அறிய
ஓமன் நாட்டில் இருந்து 44 ஆயிரம் டன் யூரியா உரங்கள் காரைக்கால் துறைமுகத்திற்கு வருகை
ஓமனில் இருந்து கொண்டு வரப்பட்ட யூரியாவை, தமிழகம், கேரளா ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு 15 நாட்களுக்குள் அனுப்ப இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ் பேட்டி

உரங்களை பார்வையிடும் நாகை ஆட்சியர்
வரும் 2023 ஆம் ஆண்டு கரீப் பருவத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களுக்கு ஓமன் நாட்டில் இருந்து இப்போ யூரியா உரங்கள் காரைக்கால் துறைமுகத்திற்கு வந்தடைந்தது.இதில் முதல்கட்டமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 140 மெட்ரிக் டன் யூரியா கூட்டுறவு கடன் சங்கங்களில் தேவைக்கேற்ப இருப்பு வைக்கப்படும், எதிர்வரும் குறுவை பருவத்தில் விவசாயிகள் அதிக சாகுபடிக்கு ஊக்குவிக்கவும் உர பற்றாக்குறையை பயன்படுத்தி உரங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க வும் தமிழக முதல்வர் சிறப்பான இத்திட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் வரும் குறுவை பருவத்தில் உரத் தட்டுப்பாடு இன்றி விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் உரம் வழங்கிட அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் அடுத்த பருவத்திற்கு விவசாயிகளுக்கு உரத்தேவை ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்டை நாடுகளில் இருந்து உரம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து மத்திய அரசு ஓமன் நாட்டில் இருந்து 44 ஆயிரம் டன் யூரியா இறக்குமதி செய்துள்ளது.

கப்பல் மூலம் காரைக்கால் வந்த யூரியாவினை நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் இன்று பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து லாரிகளில் குடோனுக்கு கொண்டு சென்ற யூரியாவை பணியாளர்கள் மூட்டைகளில் நிரப்பும் பணியையும் ஆய்வு செய்தார். பின்னர் கூறிய ஆட்சியர் அருண் தம்புராஜ், ஓமன் நாட்டில் இருந்து கரீப் பருவத்திற்காக தமிழகம், கேரளா ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு 44 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா தற்போது வந்துள்ளதாகவும் இதில் 22 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டு அவை அனைத்தும் 15 நாட்களில் டெல்டா உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதன் மூலம் தமிழகத்தில் அடுத்த பருவமான குறுவை சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு உரத் தட்டுப்பாடு இருக்காது எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















