TN Headlines: 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; அன்புமணி ராமதாஸ் கண்டன போராட்டம் - முக்கிய செய்திகள்
TN Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை கீழே காணலாம்.
- TN Rain Alert: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! அடுத்த 3 நாட்கள் கொட்டப்போகும் மழை - வானிலை அப்டேட் இதோ
உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரளப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26 -ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- ‘ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயம் – 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம்’ மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கோப முகம் காட்டிய எடப்பாடி..!
அதிமுக தலைமையகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் கோபத்தின் மின்னல்கள் பாய்ந்துள்ளன. ஏற்கனவே நவம்பர் 21ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கும் என்று அறிவித்தாலும் மீண்டும் ஒருமுறை திட்டமிட்டபடி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அதிமுக அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியானது. கூட்டம் தொடங்கியதும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி வரவேற்று பேசினார். கடைசியாக அதிமுக கொறாடா எஸ்.பி.வேலுமணி நன்றி தெரிவித்து பேசினார். மேலும் படிக்க
- அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் சோதனை.. களமிறங்கிய வருமான வரித்துறையினர்..!
திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான அருணை மருத்துவல் கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அருணை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். இதையடுத்து, அங்கு சோதனை நடைபெறுவதால் 20க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் வருமான வரித்துறையினர் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். மேலும் படிக்க
- 'இறை சொத்தை களவாடக்கூடிய ஆட்சி இது இல்லை' - நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்
கோயில் சொத்துக்கள் திருடப்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, “இந்து சமய அறநிலைத்துறை என்பது ஆன்மீகத்திற்கும், இறையன்பர்களை சிறப்பிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. உயர் பொறுப்பில் உள்ள ஒருவர் இப்படிப்பட்ட குற்றசாட்டை கூறுவது கண்டிக்கத்தக்கது. ஒரு விஷயத்தை ஆராயாமல் வாய் புளித்ததோ, மாங்கா புளித்ததோ என்று பேசக்கூடாது. மேலும் படிக்க
- Anbumani Ramadoss: விவசாயிகளுக்கு குண்டர் சட்டமா? மனசாட்சி இருக்கிறதா? - அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாகத்திற்கு 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் அரசு மற்றும் விவசாய நிலம் அடங்கும். இதனால், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 120 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதை அடுத்து, போராட்டம் நடத்திய 20 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்னதர். பின்னர், கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது கடும் எதிர்ப்பை கிளப்பியது. அதோடு, இந்த வழக்கில் கைதாகி குண்டர் சட்டம் பாய்ந்த 19 நபர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் படிக்க