மேலும் 3 காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் : அரசு அறிவிப்பு!

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி காவல்துறையின் தொழில்நுட்பப் பிரிவு துணை ஐ.ஜியாக இருந்த ராஜேந்திரன் ஐ.பி.எஸ். சென்னை கிழக்கின் காவல் மற்றும் சட்ட ஒழுங்கு இணை ஆணையர் மற்றும் துணை ஐ.ஜியாகப் பணிமாற்றம் செய்யப்பட்டார்.

FOLLOW US: 

தமிழ்நாடு அரசு மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பளித்து பணியிடமாற்றம் செய்துள்ளது. இதுதொடர்பான ஆணையை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ளார். இந்த ஆணையின்படி தமிழ்நாடு காவல்துறை அகாடெமியின் டி.ஜி.பி.யாகப் பொறுப்பு வகித்த டாக்டர் பிரதீப் பிலிப் ஐ.பி.எஸ்.  காவல் பயிற்சி மற்றும் காவல்துறைப் பயிற்சிக் கல்லூரியின் டி.ஜி.பி.யாகவும் பொறுப்பு வகிப்பார்.  பொது விநியோகத்தின் கூடுதல் டி.ஜி.பி.யாகப் பொறுப்பு வகித்த அபஷ் குமார் ஐ.பி.எஸ். பொருளாதாரக் குற்றவியல் துறையின் கூடுதல் டி.ஜி.பி.யாகவும் பொறுப்பு வகிப்பார்.  கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பிரிவின் உதவி காவல்துறை கண்காணிப்பாளராக இருக்கும் விஷ்வேஷ் பாலசுப்ரமணியம் ஐ.பி.எஸ்.  ஆளுநர் மாளிகை உதவி காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 3 காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் : அரசு அறிவிப்பு!

முன்னதாக, தமிழ்நாட்டில் காவல்துறை அதிகாரிகளுக்கான பணியிடமாற்ற உத்தரவை இரண்டு நாட்களுக்கு முன்பு பிறப்பித்தது தமிழ்நாடு அரசு. இதன்படி மொத்தம் 49 காவல்துறை அதிகாரிகள் வெவ்வேறு மாவட்டங்களுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 14 பேருக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிட மாற்றப் பட்டியலில் 14 பெண் அதிகாரிகளும் அடக்கம். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி காவல்துறையின் தொழில்நுட்பப் பிரிவு துணை ஐ.ஜியாக இருந்த ராஜேந்திரன் ஐ.பி.எஸ். சென்னை கிழக்கின் காவல் மற்றும் சட்ட ஒழுங்கு இணை ஆணையர் மற்றும் துணை ஐ.ஜியாகப் பணிமாற்றம் செய்யப்பட்டார்.

கோவை சரக டி.ஐ.ஜியாகப் பொறுப்பு வகித்த நரேந்திரன் ஐ.பி.எஸ்., தென் சென்னையின் காவல் மற்றும் சட்ட ஒழுங்கு இணை ஆணையர் மற்றும் டி.ஐ.ஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.  கிழக்கு சென்னையின்  டி.ஐ.ஜி மற்றும் காவல் ,சட்ட ஒழுங்கு இணை ஆணையராக இருந்த வி.பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்.  மத்திய திருச்சிராப்பள்ளியின் ஐ.ஜி.யாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். பெண் அதிகாரிகளில் திருவாரூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்த கயல்விழி ஐ.பி.எஸ். மட்டும் பதவி உயர்வு பெற்றார். 

டி.ஐ.ஜியாகப் பதவி உயர்வு பெற்றுள்ள அவர் திருச்சி மாவட்ட ஆயுதக் காவல் டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மற்றபடி, சென்னை தலைமைச்செயலக டி.ஐ.ஜியாக இருந்த மகேஸ்வரி ஐ.பி.எஸ். சேலம் சரக டி.ஐ.ஜி.,யாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். விஜிலன்ஸ் மற்றும் லஞ்சஒழிப்புத்துறை டி.ஐ.ஜியாக இருந்த ராதிகா ஐ.பி.எஸ்.,  திருச்சி சரக டி.ஐ.ஜியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.,யாக இருந்த சாமுண்டீஸ்வரி ஐ.பி.எஸ்.,  சென்னை பெருநகரக் காவல்துறை தலைமையகத்தின் இணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

Tags: Tamilnadu Police transfer TNPolice

தொடர்புடைய செய்திகள்

சசிகலாவுடன் பேசும் அதிமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை..!

சசிகலாவுடன் பேசும் அதிமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை..!

Meera mithun | ''தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்.. காரணம் இவர்தான்” : முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதிய மீரா மிதுன்!

Meera mithun | ''தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்.. காரணம் இவர்தான்” : முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதிய மீரா மிதுன்!

Vandalur Lion | டிஸ்டெம்பர் வைரஸ் தொற்றால் வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு..!

Vandalur Lion | டிஸ்டெம்பர் வைரஸ் தொற்றால் வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு..!

சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

டாப் நியூஸ்

Naira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது!

Naira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது

100 கோடி கடன்... ஒன்றரை கோடி கமிஷன்! ‛தங்க மகன்’ ஹரிநாடாருக்கு அடுத்தடுத்து பங்கம்!

100 கோடி கடன்... ஒன்றரை கோடி கமிஷன்! ‛தங்க மகன்’ ஹரிநாடாருக்கு அடுத்தடுத்து பங்கம்!