Bengaluru RRTS Train: போக்குவரத்து புரட்சி: பெங்களூரு-தமிழ்நாடு இடையே RRTS திட்டம்! பயண நேரம் குறையும், பொருளாதாரம் உயரும்!
Bengaluru- Hosur- Krishnagiri- Dharmapuri: பெங்களூரு - ஓசூர் - கிருஷ்ணகிரி - தர்மபுரி வழித்தடத்தில் ஆர்.ஆர்.டி.எஸ் இயக்கப்பட உள்ளது.

ஆர்.ஆர்.டி.எஸ் (RRTS) என்பது மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு (Regional Rapid Transit System) என்று அழைக்கப்படும் ஒரு ரயில் சேவையாகும். மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் பயணிக்கும் வகையில் உருவாக்கப்படும். சராசரியாக 160 கிலோமீட்டர் வேகத்திற்கு ரயில்கள் இயக்கப்படும். இந்தியாவில் முதல் விரைவு போக்குவரத்து அமைப்பு ரயில் டெல்லி மீரட் இடையே கடந்த 2023-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
முக்கிய நகரங்களை இணைக்கக்கூடிய, வகையில் இந்த போக்குவரத்து அமைப்பு உருவாக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கூற இந்த போக்குவரத்து அமைப்பின் மூலம், சென்னை - வேலூர், சென்னை - திண்டிவனம் மற்றும் கோயம்புத்தூர் - சேலம் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் போக்குவரத்து அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது.
தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் ( NCRTC )
தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் ( NCRTC - NATIONAL CAPITAL REGION TRANSPORT ) போக்குவரத்து அமைப்பு முதன் முதலில் நமோ பாரத் செமி ஐ ஸ்பீடு ( Semi - High Speed RRTS ) போக்குவரத்து வழித்தடம் உருவாக்கப்பட்டது. 180 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்லும் வகையில் அமைப்பு உருவாக்கப்பட்டது.
நகரங்களுக்கு இடையே விரைவான பயணத்தை வழங்கும் RRTS Regional Rapid Transit System ) திட்டங்களை வடிவமைத்து, உருவாக்கி, செயல்படுத்தி, நிர்வகிப்பது மற்றும் பராமரிப்பது இந்த அமைப்பின் முக்கிய பங்காக இருந்து வருகிறது. அந்த வகையில் என்சிஇஆர்டிஎஸ், பெங்களூர் பகுதிக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில், செமி - ஐ - ஸ்பீட் நமோ பாரத் வழித்தடங்களை அமைக்க திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
வழித்தடங்கள் என்னென்ன ?
"பெங்களூர் - ஹோஸ்கோட் - கோலார்" ( Bangalore - Hoskote - Kolar) ஆகிய பகுதிக்கு 65 கிலோ மீட்டர் தூரத்திற்கு வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 46 நிமிடத்தில் பெங்களூருக்கு சென்றடைய முடியும். பெங்களூர் - மைசூர் (Bangalore- Mysore) 145 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த வழித்தடம் அமைய உள்ளது. பெங்களூர் மற்றும் மைசூர் ஆகிய தூரத்தை 102 நிமிடத்தில் கடக்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் - தும்கூர் ( Bengaluru - Tumakuru ) 138 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த வழித்தடம் அமைய உள்ளது. பெங்களூர் மற்றும் மைசூர் ஆகிய தூரத்தை 97 நிமிடத்தில் கடக்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு - ஓசூர் - கிருஷ்ணகிரி - தர்மபுரி (Bengaluru - Hosur - Krishnagiri - Dharmapuri )
பெங்களூர் மற்றும் தமிழ்நாடு நகரங்களுக்கு இடையே, வணிகப் போக்குவரத்து அதிக அளவு இருக்கின்றது. பெங்களூரை போல சுற்றுவட்டாரங்களில் கூடிய ஓசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட நகரங்களும் வளர தொடங்கி இருக்கின்றனர். இந்த வழித்தடம் சுமார் 138 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைய உள்ளது. இதன் மூலம் 95 நிமிடத்தில், தர்மபுரியில் இருந்து பெங்களூரை அடைய முடியும்.
சிறப்பம்சங்கள் என்னென்ன ? Key Features of RRTS Train
தென்னிந்தியாவில் மிகப்பெரிய போக்குவரத்து புரட்சியை இந்த ரயில் சேவை ஏற்படுத்தும். இதன் மூலம் பொருளாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் அடையும். தினமும் இப்பகுதியில் இருக்கும் மக்கள் பெங்களூருக்கு சென்று வரவும் முடியும். இது வேலைக்கு செல்பவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.
பிரச்சினைகள் என்னென்ன ?
இந்த RRTS திட்டம் இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report - DPR) தயாரிப்பு, நிதி ஒதுக்கீடு, மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பு ஆகவே தேவைப்படும் என்பதால் இந்த திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது.
இந்தத் திட்டம் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களைக் கடந்து செல்வதால், இரு மாநில அரசுகளின் ஒத்துழைப்பும் மிக முக்கியமாக இருக்கிறது. அதே போன்று நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம். ஆனால் இந்த திட்டம் மிக முக்கிய திட்டம் என்பதில் மாற்று கருத்து இல்லை.





















