வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு ! - தமிழக அரசு அறிவிப்பு

2017, 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்காதவர்கள் அடுத்த மூன்று மாதத்திற்குள் வேலைவாய்ப்பு அலுவவலகத்தில் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசின் அரசாணை 204,  28.5.2021ன் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவித்தவாறு இச்சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரர்கள் இவ்வரசாணை வெளியிடப்பட்ட நாளான 28.5.2021 முதல் மூன்று மாதங்களுக்குள் அல்லது 27.8.2021-க்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பம் அளித்து புதுப்பித்துக் கொள்ளலாம்.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு ! - தமிழக அரசு அறிவிப்பு

மேலும் படிக்க : https://tamil.abplive.com/news/india/cm-stalin-inspected-corona-patients-care-in-esi-hospital-in-coimbatore-4524

இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி 27.8.2021 வரை பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலை வேலைவாய்ப்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Tamilnadu job employment offers

தொடர்புடைய செய்திகள்

மம்தா பேனர்ஜிக்கும் சோசலிசத்துக்கும் கல்யாணம்! ஒரு ஸ்வீட் Talk!

மம்தா பேனர்ஜிக்கும் சோசலிசத்துக்கும் கல்யாணம்! ஒரு ஸ்வீட் Talk!

மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் புகார்!

மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் புகார்!

ஆளுநரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் - காரணம் என்ன?

ஆளுநரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் - காரணம் என்ன?

தமிழகத்தில் 25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தலைமை செயலாளர் உத்தரவு..!

தமிழகத்தில் 25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தலைமை செயலாளர் உத்தரவு..!

14 நாள் குழந்தையின் கைவிரல் துண்டிக்கப்பட்ட சம்பவம் : மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

14 நாள் குழந்தையின் கைவிரல் துண்டிக்கப்பட்ட சம்பவம் : மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

டாப் நியூஸ்

பட்டியலின மக்களை கோவிலுக்குள் விடாமல் தடுத்த சம்பவம் : அமைச்சருக்கு கடிதம் எழுதிய ரவிக்குமார் எம்.பி.,

பட்டியலின மக்களை கோவிலுக்குள் விடாமல் தடுத்த சம்பவம் : அமைச்சருக்கு கடிதம் எழுதிய ரவிக்குமார் எம்.பி.,

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

Sruthihaasan | தொகுப்பாளராகிறாரா ஸ்ருதிஹாசன்?

Sruthihaasan | தொகுப்பாளராகிறாரா ஸ்ருதிஹாசன்?

'கோயில் நிலம் கோயில்களுக்கே.. வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது’ - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

'கோயில் நிலம் கோயில்களுக்கே.. வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது’ - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி