Oscars 2025: 22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
Oscars 2025: ஹாலிவுட் நடிகை ஹாலே பெர்ரி, 22 வருடங்கள் காத்திருந்து, ஒரு நடிகை பழிவாங்கியுள்ளார். ஆஸ்கர் 2025 ரெட் கார்பெட்டில் நடந்த அந்த சுவாரஸ்யமான சம்பவம் என்ன தெரியுமா.?

2003 ஆம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழா நிகழ்ச்சியில், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், விருது விழா மேடையில், ஹாலே பெர்ரிக்கு, நடிகர் அட்ரியன் பிராடி முத்தம் கொடுத்து, சர்ச்சையை ஏற்படுத்தினார். அதற்காக, இந்த வருட ஆஸ்கர் விழாவில், ஹாலே பெர்ரி பழி தீர்த்துள்ளார்.
பிரமாண்டமாக நடக்கும் ஆஸ்கர் விருது விழா 2025
திரைத்துறையின் உச்ச விருதான ஆஸ்கர் விருதை வெல்வது, ஒவ்வொரு திரைக்கலைஞரின் கனவாக இருக்கும். அப்படிப்பட்ட ஆஸ்கர் விருதின் 97வது ஆண்டு விருது விழா, லாஸ் ஏஞ்சல்சின் டாஃபி அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றுவருகிறது. 2024-ம் ஆண்டின் சிறந்த படங்கள், கலைஞர்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. டோஜா கேட், அரியானா கிராண்ட் உள்ளிட்ட பிரபல பாடகர்களின் இசை நிகழ்ச்சிகளுடன், கோலாகலமாக நடைபெறுகிறது 2025-ம் ஆண்டின் ஆஸ்கர் விருது விழா. நகைச்சுவை நடிகர் கானன் ஓ பிரையன் இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்குகிறார்.
ரெட் கார்பெட்டில் நடந்த சுவாரஸ்ய பழிவாங்கும் முத்த சம்பவம்
பொதுவாக, ஆஸ்கர் விருது விழா தொடங்குவதற்கு முன், அங்கு வரும் திரைப்பிரபலங்களுக்கு ரெட் கார்பெட் வரவேற்பு வழங்கப்படுவது ஒரு வழக்கமாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று நடந்த விருது விழாவில், ஒரு சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது.
2003-ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவின்போது, நடிகர் அட்ரியன் பிராடி, சிறந்த நடிகருக்கான தனது முதல் ஆஸ்கர் விருதை The Pianist படத்திற்காக வென்றார். அந்த விருதை பெற மேடைக்கு வந்த அவர், யாரும் எதிர்பாராத விதமாக, அவருக்கு விருது வழங்கிய பிரபல நடிகை ஹாலே பெர்ரியை கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். இதை ஹாலேயும் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த சம்பவம் ஒரு சர்ச்சையைக் கூட கிளப்பியது.
இந்த நிலையில், இன்றைய ஆஸ்கர் ரெட் கார்பெட் வரவேற்பு நிகழ்வின்போது, தனது காதலியுடன் நின்றிருந்த அட்ரியன் பிராடியை, சற்றும் எதிர்பாராத விதமாக, ஹாலே பெர்ரி கட்டியணைத்து முத்தம் கொடுத்துவிட்டார். 22 ஆண்டுகளுக்குப் பின், அட்ரியனை பழி தீர்த்த ஹாலே பெர்ரி, அட்ரியனின் காதலியிடம் அதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார். இது குறித்து கூறியுள்ள ஹாலே பெர்ரி, 2003 சம்பவத்திற்குப்பின், அட்ரியன் பிராடியை பல பார்ட்டிக்களில் பார்த்ததாகவும், ஆனால், முதல் முறையாக, இன்று தான் ரெட் கார்பெட்டில் பார்ப்பதாகவும், அதனால்தான், பழி தீர்க்கும் வகையில் அவருக்கு முத்தம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர் இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார், அதற்கு அவர் தகுதியானவர்தான் எனவும் அட்ரியனுக்கு புகழாரம் சூட்டினார் ஹாலே பெர்ரி.
A reunion 22 years in the making. #Oscars pic.twitter.com/MkaF2xb6SE
— The Academy (@TheAcademy) March 2, 2025





















