Oscars 2025 LIVE: விருதுகளை அள்ளி குவிக்கும் அனோரா திரைப்படம்! ஆஸ்கர் விருதுகள் நேரலை
Oscars 2025 LIVE Updates: 2025 ஆம் ஆண்டிற்கான 97 ஆவது ஆஸ்கர் விருது இன்று லாஸ் எஞ்சலஸில் கோலகலமாக நடந்து முடிந்தது.

Background
ஆஸ்கர் விருதுகள் 2025:
97-வது ஆஸ்கர் விருதுகள் இன்று அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் நடைப்பெற்று வருகிறது. மொத்தம் 23 பிரிவுகளில் 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களை அங்கீகாரம் கொடுக்கும் வகையில் இந்த விருதானது வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியானது காலை 5.30 மணிக்கு தொடங்கி நடைப்பெற்று வருகிறது. பாட்காஸ்டரும் நடிகருமான கோனன் ஓ பிரையன் இந்த நிகழ்ச்சியை முதல் முறையாக தொகுத்து வழங்கி வருகிறது. எமிலியா பெரெஸ் என்கிற பிரென்ச் திரைப்படம் மொத்தம் 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆங்கிலம் அல்லாத வேறு மொழி திரைப்படம் ஒன்று அதிக விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட என்கிற சாதனையை படைத்துள்ளது.
முக்கிய பிரிவுகளான சிறந்த நடிகர் , நடிகையர் , இயக்குநர் , சிறந்த படத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.
நேரலை:
ஆஸ்கார் 2025 நேரடி ஒளிபரப்பு: 97வது அகாடமி விருதுகளை ABC, JioHotstar, Star Movies, Hulu, YouTubeTV, FuboTV மற்றும் AT&T TV ஆகியவற்றில் அனைவரும் நேரடியாகப் பார்க்கலாம்.
சிறந்த திரைப்படம் அனோரா!
சீன் பேக்கர் இயக்கத்தில் வெளிவந்த அனோரா திரைப்படம் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது
சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது
அனோரா படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் ஷான் பேக்கர்



















