தேசிய அரசியலில் விஜய்! மோடி, நிதிஷ்-க்கு ஸ்கெட்ச்! பிரசாந்த் கிஷோரின் மூவ்
பிரசாந்த் கிஷோரை வைத்து தேசிய அரசியல் பக்கமும் கவனத்தை திருப்புகிறார் விஜய். பாஜக, ஐக்கிய ஜனதா தளம் என முக்கியமான கட்சிகள் இருக்கும் பீகாரில் பிரசாந்த் கிஷோருக்கு கமிட்மெண்ட் ஒன்றை கொடுத்து அதிரடி காட்டியுள்ளார் விஜய்.
தவெகவிற்கு ஆதவ் அர்ஜூனா நுழைந்த பிறகு விஜய்க்கு உதவுவதற்காக ENTRY கொடுத்தார் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர். விஜய்யுடன் நடந்த மீட்டிங்கில் கட்சியின் வாக்கு சதவீதம், அதை அதிகரிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என முழு ரிப்போர்ட் ஒன்று விஜய் கைகளுக்கு சென்றது. தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய்யுடன் சேர்ந்து மேடையேறினார் பிரசாந்த் கிஷோர். அவர் எத்தனையோ கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்கள் வகுத்து கொடுத்திருந்தாலும் யாருடனும் மேடையேறுவதை வழக்கமாக கொண்டவர் கிடையாது. அதனால் விஜய் விஷயத்தில் பிரசாந்த் கிஷோரின் மூவ் என்ன என்பது கேள்வியாகவே இருந்தது.
தவெக விழாவில் பேசிய பிரசாந்த் கிஷோர், தவெகவுக்கு strategy செய்ய நான் வரவில்லை, தவெகவை வெற்றி பாதைக்கு வழிநடத்தி செல்வேன் என பேசியிருந்தார். அப்படி இருந்தால் அரசியலில் விஜய்யும் பிரசாந்த் கிஷோரும் இணைந்து பயணிக்க போகிறார்களா என்ற கேள்வி வந்தது. விஜய் தேசிய அரசியல் பக்கமும் திரும்புவதற்கான வேலைகள் நடந்து வருவதாக பேசப்பட்டது.
இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், பீகார் அரசியலில் தனது கட்சிக்கு விஜய் ஆதரவாக செயல்படுவார் என்றும் அங்கு அவருக்கு நிறைய ரசிகர்கள் இருப்பதாகவும் பேசியுள்ளார். பீகாரில் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. பீகாரில் பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பிரசாந்த் கிஷோரின் கட்சி பீகாரில் தத்தளித்து வரும் நிலையில் விஜய்யை வைத்து பிரச்சாரம் செய்வதற்கான ப்ளானும் இருப்பதாக சொல்கின்றனர்.
பீகார் மாநில அரசியலை பொறுத்தவரை நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இருப்பதால் தேசிய அளவிலும் அதிக கவனம் பெறும் மாநிலமாக இருக்கிறது. அதனால் விஜய் பீகார் அரசியலிலும் நுழைந்தால் தேசிய அளவில் அவர் மீது கவனம் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.





















