TN Fishermen Arrest: கொதிப்பில் தமிழகம் - மீண்டும் 23 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் கைது
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, அதிகாலையில் கைது செய்யப்பட்ட கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர்கள், காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படும் சம்பவம் மீனவர்களை கொதிப்படைய செய்துள்ளது.
அச்சத்தில் தமிழக மீனவர்கள்:
முதலமைச்சர் ஸ்டாலினும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வெளியுறவு அமைச்சகத்திற்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். அதோடு, கச்சத்தீவை மீட்டு, மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தி வருகிறார். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் என்பது தொடர்கதையாகி வருகிறது. சில நேரங்களில் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு, ஆயுதங்களை கொண்டு தாக்குதல், வலைகள் மற்றும் படகுகளை சேதப்படுத்துதல் போன்ற சம்பவங்களிலும் இலங்கை கடற்படையினர் ஈடுபடுகின்றனர். இதனால், கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்கள் மத்தியில் பாதுகாப்பின்மை தொடர்பான அச்சம் நீடித்து வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

