Ayali Serial: அயலிக்கு நடக்கும் அநியாயம்.. இரண்டாம் தாரமாக கட்டி வைக்க ஜமுனா சதி
அயலியை இரண்டாம் தாரமாக கட்டி வைக்க ஜமுனா சதித்திட்டம் செய்வதுடன் தற்கொலை நாடகம் ஆடி மிரட்டுவதால் அயலி சீரியல் சூடுபிடித்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அயலியை பெண் பார்க்க வருவதாக ஜமுனா சொல்லிய நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
உதயபெருமாள் கையில் சிவா அப்பா மோதிரம்:
அதாவது சிவாவின் அப்பா குறித்து கிடைத்த போட்டோவில் மோதிரம் இருக்க அப்படியே அதே மோதிரத்துடன் உதய பெருமாள் கையெழுத்து போடுவது தெரிய வருகிறது. அடுத்து பாவை எதையோ எழுதி வைத்திருக்க இந்திராணி அதை வாங்கி பார்க்க அப்பா என எழுதி இருப்பதை பார்த்து பீல் ஆகிறாள், அதை அழித்து அம்மா என எழுதி உனக்கு எல்லாமே நான் தான் என்று சொல்கிறாள்.
வருத்தப்படும் அயலி:
இதையடுத்து உதயபெருமாளிடம் என் உலகமே பாவையும் கபிலனும் தான் என்று சொல்லி வருத்தப்படுகிறாள். பிறகு அயலி பெண் பார்க்க வருவதை நினைத்து அம்மா போட்டோ முன்பு நின்று என் இலட்சியத்தை எப்படி நிறைவேற்ற போறேன் என்று வருத்தப்படுகிறாள்.
இரண்டாம் தாரமாக அயலி:
அடுத்து மாப்பிள்ளை வீட்டார் வருகின்றனர், அயலியிடம் காபி கொடுத்து அனுப்ப அயலி மாப்பிள்ளை என நினைத்து இளைஞர் ஒருவருக்கு காபி கொடுக்க வர கடைசியில் அவர் மாப்பிள்ளை இல்ல, இவருக்கு இரண்டாம் தாராமா தான் அயலியை கேட்டு வந்து இருக்கோம் என்று அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
உடனே பாட்டி சத்தம் போட அயலி கண் கலங்கியபடி ரூமுக்கு வந்து விடுகிறாள், பின்னாடியே வந்த ஜமுனா இந்த கல்யனாதுக்கு நீ சம்மதம் சொல்லணும், இல்லனா தற்கொலை பண்ணிப்பேன் என்று மிரட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















