EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
EPS CM Stalin: கடலூரில் 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

EPS CM Stalin: திமுக அரசுக்கு 2026ல் மக்கள் தண்டனை அளிப்பார்கள் என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “போதைப் பொருள் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள ஸ்டாலின் மாடல் ஆட்சியில், 80வயது மூதாட்டியைக் கூட பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அவலம். கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 5 வாலிபர்கள் கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாடு எங்கே போகிறது? என்று தெரியாத நிலையிலேயே உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றாலும், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், இனியும் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு துளியும் இல்லை.
போதைப் பொருள் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள ஸ்டாலின் மாடல் ஆட்சியில்,
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) June 17, 2025
80வயது மூதாட்டியைக் கூட பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அவலம்!
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 5 வாலிபர்கள் கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஸ்டாலின்…
”தண்டனை இருக்கு”
6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை, "அவர்களே அவர்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய" அவலச் சூழலை தமிழகத்தில் ஏற்படுத்திய இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். இதுபோன்ற சம்பவங்களுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ள போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்காத, காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் முதலமைச்சர் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். இப்படிப்பட்ட கேவலமான ஆட்சியைக் கண்டு கொதிப்படைந்துள்ள மக்கள், இதற்கான தண்டனையை நிச்சயம் 2026-ல் இந்த திமுக அரசுக்கு வழங்கத் தான் போகிறார்கள்” என எடப்பாடிபழனிசாமி காட்டமாக பதிவிட்டுள்ளார்.
மூதாட்டிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை:
பண்ருட்டி அருகே திராசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டியான கௌசல்யா, தனது தினசரி நடவடிக்கையின்படி புலவனூர் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது சாலையோரம் மதுபோதையில் அமர்ந்திருந்த இளைஞர்கள் சிலர் மூதாட்டியை தரதரவென சவுக்கு தோப்பிற்குள் இழுத்து சென்றுள்ளனர். மூதாட்டி சத்தம் போடாமல் இருக்க வாயில் மண்ணை கொட்டிய அவர்கள், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அதோடு, மூதாட்டி அணிந்திருந்த ஒரு சவரன் நகைகளையும் அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். அதனடிப்படையில், பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் பதுங்கி இருந்த சுந்தரவேல் என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது தப்பிக்க முயற்சித்ததால் அவரை சுட்டு பிடிக்க வேண்டியாதாயிற்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமறைவாகியுள்ள மற்ற குற்றவாளிகளை தேடும் பணியுட்ம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.






















