Annamalai vs EPS | "இபிஎஸ் கூட்டணி வேண்டாம்! நம்ம பவர் தெரியுமா?" அண்ணாமலை புது ரூட் | ADMK BJP
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுகவை எப்படியாவது வெளியேற்றவிட்டு தங்கள் தலைமையிலேயே ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று அண்ணாமலை திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தமிழக கட்சிகள் இப்போதே தீவிர படித்தியுள்ளன. அந்த வகையில் ஆளும் திமுக காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியிடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என்றும் தங்களது கூட்டணி வலுவாக உள்ளது என்றும் கூறி வருகிறது. அதேபோல், மறுபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து அதிமுக தேர்தலை சந்திக்க தயராகி வருகிறது.
இந்த சூழலில் தான் அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, “2026ல் கூட்டணி ஆட்சி என்று சொல்ல மாட்டேன். நான் பாஜக ஆட்சி என்றுதான் சொல்வேன்” என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். இது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. அதிமுக நிர்வகிகள் சிலரும் இது அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்து இல்லை டெல்லி தலைமையின் பின்னணி இல்லாமல் அவர் இவ்வாரு பேச வாய்ப்பில்லை என்று கடுகடுத்தனர்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக - பாஜக கூட்டணி உருவானதில் இருந்து கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றாக சந்தித்து கூட பேசவில்லை. மறுபுறம் அண்ணாமலை ஆதரவாளர்களும், இபிஎஸ் ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் அதிமுக தலைமையின் கீழ் இல்லாமல் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது போல் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கி நாம் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என்று அண்ணாமலை மத்திய பாஜக தலைமையிடம் சொல்லி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் கடந்த கால தோல்விகளை சுட்டிக்காட்டி தனிக்கூட்டணி தொடர்பாக அண்ணாமலை பேசி வருவதாக சொல்கின்றனர். தன்னுடைய தலைவர் பதவி போனதற்கு இபிஎஸ் தான் காரணம் என்று தனக்கு நெருங்கியவர்களிடம் அண்ணாமலை புலம்புவதாக கூறப்படும் நிலையில் இபிஎஸ் தலைமையில் தமிழக பாஜக சட்டமன்ற தேர்தலை சந்திக்க கூடாது என்று இப்போதே காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டதாக சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.





















