மேலும் அறிய

போலி கையெழுத்து இட்டு கூட்டு சதி - ஏமாற்றப்பட்ட விவசாயி நீதி கேட்டு பல ஆண்டுகளாக போராட்டம்...!

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கண்காணிப்பாளர் கையொப்பத்தை ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் போட்டு மோசடி செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி புகார் அளித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கண்காணிப்பாளர் கையொப்பத்தை ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் போட்டு மோசடி செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்தி செய்யப்பட்ட டிராக்டர் 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அகரஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் 39 வயதான மதன்மோகன். இவர் கடந்த 2019- ம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தின் விவசாயக்கடன் பெற்று 2 டிராக்டர்களை வாங்கியுள்ளார். கொரோனா தொற்றுக்காலத்தில் தவணை முறையாக செலுத்த முடியாத நிலையில் 2021-ல் மதன்மோகனின் 2 டிராக்டர்களையும் ஜப்தி செய்ததோடு, அவரது கையெழுத்தை போலியாக போட்டு பெயரை மாற்றி டிராக்டரை விற்பனை செய்து மோசடி செய்ததாக மதன்மோகன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 


போலி கையெழுத்து இட்டு கூட்டு சதி - ஏமாற்றப்பட்ட விவசாயி நீதி கேட்டு பல ஆண்டுகளாக போராட்டம்...!

தொடர் போராட்டம் 

இந்நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில் எந்த ஒரு நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கப்படாத நிலையில், 2021- ம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதன்மோகன் அவரது தாய் உமாமகேஸ்வரியுடன் தீக்குளிக்க முயற்சி செய்தார். அதன் பின்பும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் 2022 -ம் ஆண்டு மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு விஷம்குடித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சிசெய்தார்.

அப்போதும் அவருக்கு தீர்வு கிடைக்காத நிலையில், மதன்மோகன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனு அளித்து வந்ததை அடுத்து கடந்த மார்ச் மாதம் தனியார் டிராக்டர் நிறுவன உரிமையாளர்கள் 2 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை, இதனால் அதிர்ச்சி அடைந்த மன்மோகன் காவல்துறையினரை கண்டித்து கடந்த 2023 -ம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து அப்போதைய மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் பேச்சுவார்ததை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டார். 


போலி கையெழுத்து இட்டு கூட்டு சதி - ஏமாற்றப்பட்ட விவசாயி நீதி கேட்டு பல ஆண்டுகளாக போராட்டம்...!

ஓட்டுநர் பயிற்சி பள்ளி மீது புகார் 

இந்நிலையில் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கண்காணிப்பாளர் கையொப்பத்தை பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் போட்டு மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டி விவசாயி மதன்மோகன் மீண்டும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்திடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். அவர் அளித்த மனுவில், கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 08 ம் தேதி அன்று மயிலாடுதுறை சீர்காழி மெயின்ரோட்டில் வடக்கு வள்ளலார் வீதி என்ற முகவரியில் இயங்கி வரும் Easan Farm Meachinery என்ற நிறுவனத்தில் 439 என்ற உழவு டிராக்டரை ஆக்சிஸ் பேங்க் கடன் உதவியில் விலைக்கு வாங்கினேன்.


போலி கையெழுத்து இட்டு கூட்டு சதி - ஏமாற்றப்பட்ட விவசாயி நீதி கேட்டு பல ஆண்டுகளாக போராட்டம்...!

இந்த வாகனமானது கடந்த 27/09/2019 அன்று மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிரந்தர பதிவு செய்யப்பட்டு, பதிவு எண் வழங்கப்பட்டது. இந்த வாகன பதிவில் பதிவிற்கான ஆவணங்களில் வாகன உரிமையாளரின் கையொப்பம் போலியாக இட்டு முன்னுக்கு பின்னான ஆவணங்களை தயார் செய்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக எனது கையொப்பத்தை போலியாக இட்டது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட குற்ற பிரிவு காவல் துறையினர் கடந்த 21/03/2023 அன்று Easan Farm Meachinery உரிமையாளர் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் கையெழுத்தை மோசடியாக இட்ட கார்த்திக் ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார். விவசாயியை ஏமாற்றி அவரின் வாழ்வாதாரத்தை பறித்து சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக போராடி வரும் விவசாயினை கண்டு பலரும் வருத்தத்தையும் , நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இதுவல்லவோ போலீஸ்! 'ட்ரிபிள்ஸ்' வந்த சிறுவர்களுக்கு அபராதம் போடாமல் சீர்காழி போலீஸ் கொடுத்த 'செம்ம' தண்டனை!
இதுவல்லவோ போலீஸ்! 'ட்ரிபிள்ஸ்' வந்த சிறுவர்களுக்கு அபராதம் போடாமல் சீர்காழி போலீஸ் கொடுத்த 'செம்ம' தண்டனை!
மயிலாடுதுறையில் பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை வெட்டிச் சாய்த்த திமுக கவுன்சிலர் மகன்! நடந்தது என்ன?
மயிலாடுதுறையில் பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை வெட்டிச் சாய்த்த திமுக கவுன்சிலர் மகன்! நடந்தது என்ன?
திருமண வீட்டில் பயங்கரம் ! முகமூடி கும்பல் புகுந்து அரிவாள் வெட்டு - தென்காசியில் பரபரப்பு
திருமண வீட்டில் பயங்கரம் ! முகமூடி கும்பல் புகுந்து அரிவாள் வெட்டு - தென்காசியில் பரபரப்பு
மாமல்லபுரம் அருகே பயங்கரம்: குடும்பத் தகராறில் தாயை வெட்டிய மகன், மகனை சுட்ட தந்தை!
மாமல்லபுரம் அருகே பயங்கரம்: குடும்பத் தகராறில் தாயை வெட்டிய மகன், மகனை சுட்ட தந்தை!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Premalatha TVK Cabinet : துணை முதலமைச்சராகியிருப்பேன்.! விஜய் அமைச்சரவையில் இணையாதது ஏன்.? பிரேமலதா ஓபன் டாக்
துணை முதலமைச்சராகியிருப்பேன்.! விஜய் அமைச்சரவையில் இணையாதது ஏன்.? பிரேமலதா ஓபன் டாக்
ADMK Vs TVK: விஜய் வந்துடவே கூடாதுனு சொன்ன உதயநிதி- பொய் சொன்ன ரஜினி..! எ.வ.வேலு பார்த்த வேலை - பகீர் உண்மைகள்
விஜய் வந்துடவே கூடாதுனு சொன்ன உதயநிதி- பொய் சொன்ன ரஜினி..! எ.வ.வேலு பார்த்த வேலை- பகீர் உண்மைகள்
கோவையில் களமிறங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா... விளையாட்டு வீரர்களுடன் நேரடி சந்திப்பு...
கோவையில் களமிறங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா... விளையாட்டு வீரர்களுடன் நேரடி சந்திப்பு...
DMK alliance Iuml : கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என ஏற்கனவே தெரியும்.! காதர் மொய்தீன் திடீர் ட்விஸ்ட்
கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என ஏற்கனவே தெரியும்.! காதர் மொய்தீன் திடீர் ட்விஸ்ட்
கோவை வளர்ச்சிக்கு ‘கிரீன் சிக்னல்’... அதிகாரிகளுடன் ஆலோசனையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...
கோவை வளர்ச்சிக்கு ‘கிரீன் சிக்னல்’... அதிகாரிகளுடன் ஆலோசனையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...
2.40 லட்சம் கொடுத்து வாங்க Suzuki V-Strom SX பைக்கில் என்ன இருக்கு! விஷயம் இருக்குது!
2.40 லட்சம் கொடுத்து வாங்க Suzuki V-Strom SX பைக்கில் என்ன இருக்கு! விஷயம் இருக்குது!
Tamilnadu Round Up: எம்.பி., தேர்தல், வெள்ள அபாய எச்சரிக்கை, மதுரையில் சாலை மறியல் - தமிழ்நாட்டில் இதுவரை
எம்.பி., தேர்தல், வெள்ள அபாய எச்சரிக்கை, மதுரையில் சாலை மறியல் - தமிழ்நாட்டில் இதுவரை
வரலாறு படைக்கும் புதுச்சேரி! ரூ.1,975 கோடி முதலீடு... 8,500 பேருக்கு வேலை உறுதி!
வரலாறு படைக்கும் புதுச்சேரி! ரூ.1,975 கோடி முதலீடு... 8,500 பேருக்கு வேலை உறுதி!
Embed widget