Covid 19 Lockdown: என்னாது.. கொரோனா பரவலால் ஞாயிறு முழு ஊரடங்கா? அமைச்சர் மா.சு. சொன்னது என்ன?
Covid 19 Lockdown Tamil Nadu: தமிழ்நாட்டில் ஞாயிறன்று முழு ஊரடங்கு அறிவித்ததாகப் பரவும் செய்தி உண்மையா?

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாகப் பரவும் செய்தி பழையது என்று தமிழக செய்தி சரிபார்ப்பகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் பதிவர் ஒருவர் வெளியிட்ட பதிவில், ’’இதைவிட கேவலமான அரசியல் எங்கே இருக்க முடியும்? முருகர் மாநாட்டை எப்பாடு பட்டாது நடக்க விடக்கூடாது. இவ்ளோ கூட்டம் சேர்ந்தால் பிஜேபி உள்ளே வந்துடும் என்று பயப்படுகிறார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு பதில் அளித்து, தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:
‘’தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக ஞாயிறு அன்று பொது முடக்கம் அறிவிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
இது பழைய காணொளியே.
2022ம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் அறிவிப்பதாக வெளியான செய்தியை தற்போது வெளியான செய்தி போல் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
வதந்தியைப் பரப்பாதீர்!’’
இவ்வாறு தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஞாயிறன்று முழு ஊரடங்கு அறிவித்ததாகப் பரவும் பழைய செய்தி !@CMOTamilnadu @TNDIPRNEWS https://t.co/eoN2dR28d4 pic.twitter.com/ePrPfzoYHy
— TN Fact Check (@tn_factcheck) June 17, 2025
இதற்கான ஆதாரம் https://t.co/F5sxMAoOJD என்று, இந்த இணைய முகவரியையும் தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ளது.





















