மேலும் அறிய

A Raja: வட மாநிலங்களுக்கும் 2024-ஆம் ஆண்டில் விடியல் பிறக்கும் - முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா

2024-ஆம் ஆண்டில் வடமாநிலங்களுக்கும் சேர்த்தே விடியல் வரும் என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வடமாநிலங்களுக்கும் சேர்த்தே விடியல் வரும் என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

வடமாநில சகோதரர்கள் தவிப்பு:

அந்த அறிக்கையில், “முற்போக்கு அரசுகள் அமைந்தாலும் சமூகத்தில் வேரூன்றிவிட்ட பழமைவாதத்தாலும் புரட்டுகளாலும் போதிய கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைக்காமல் வடமாநில சகோதர சகோதரிகள் தவிக்கின்றனர். தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் உருவாக்கிய மாற்றத்தை, மண்டல் எழுச்சி ஏற்படுத்திவிடக் கூடாது என இன்னுமும் சில பிற்போக்குச் சக்திகள் முயன்று வருகின்றன.

இதனால், வடமாநிலங்களைச் சேர்ந்த பலர் வேலை தேடியும் புதுவாழ்வு தேடியும் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். தமிழ்நாட்டில் பணிபுரியும் அவர்களது நிம்மதியையும் கெடுக்கும் வகையில் சுயநல அவதூறு அரசியலை பா.ஜ.க. செய்வதும், அதற்கு மறைந்த ராம் விலாஸ் பாஸ்வான் மகனும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வான் துணை போவதும் கடும் கண்டனத்திற்குரியது.

பா.ஜ.க. எண்ணத்தில் மண்:

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக எங்கெங்கோ நடந்த குற்றங்களையெல்லாம், தமிழ்நாட்டில் நடந்ததென போலியான செய்திகளைப் பரப்பி, அதன்மூலம் ஒரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கிக் குளிர்காயலாம் என நினைத்த பா.ஜ.க.வின் எண்ணத்தில் மண் விழுந்திருக்கிறது. பீகாரில் இருந்து தமிழ்நாடு வந்த அரசுக்குழுவும் இங்கு பணிபுரியும் வேற்று மாநிலத் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு சிக்கலும் இல்லை என்பதை நேரில் கண்டு உறுதிசெய்திருக்கிறது.

போலிச் செய்தியை திட்டமிட்டு பரப்பியவர்கள் மீது, தமிழ்நாடு காவல்துறையும் பீகார் மாநிலக் காவல்துறையும் வழக்குகள் பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் தாங்கள் காலம்காலமாகச் செய்துவந்த பொய்களைப் பரப்பும் தொழில் மக்களிடையே அம்பலப்பட்டு நிற்பதால், சிராக் பாஸ்வான் அவர்களைத் துணைக்கு அழைத்து ஆறுதல் தேடியிருக்கிறார்கள்.

கூடாய் நட்பு கேடாய் முடியும்:

எதிர்வரும் நாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான வலிமையான கூட்டணியைக் கட்டமைக்க வேண்டும் என்று எங்கள் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான 'திராவிட நாயகன்' மு.க.ஸ்டாலின் அறைகூவல் விடுத்து, அதற்கு அச்சாரமாகத் தனது 70-ஆவது பிறந்தநாள் விழா மேடையையே களமாக மாற்றியதில், கும்பி எரிய இந்தப் பொய்ப் பரப்புரை மேற்கொள்ளப்படுவதை அறியாதவர்கள் அல்ல மக்கள். எனவே, சிராக் பாஸ்வான் வைத்து நடத்தும் நாடகங்களையும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பாதுகாப்பாக உள்ள வடமாநிலத் தொழிலாளர்களிடையே பா.ஜ.க.வின் விஷமத்தனப் பிரச்சாரத்திற்குத் துணை போக வேண்டாம் என மதிப்பிற்குரிய ராம் விலாஸ் பாஸ்வான் அவர்களது மகனுக்கு எச்சரிக்கையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சமூகநீதிக் கருத்தியலை நெஞ்சில் தாங்கிச் செயல்பட்ட மதிப்பிற்குரிய ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களை, அவருடைய கடைசிக் காலங்களில் பா.ஜ.க. தனது சுயநல அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டதை அவரது மகன் உணர்ந்து, அவர்களது வலையில் வீழாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை யார் ஒருவரும் காலத்தே உணர வேண்டும்.

வடமாநிலங்களுக்கும் விடியல்:

எனவே, சிராக் பாஸ்வனுக்கு சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். பா.ஜ.க.வுக்கான B-Team அரசியலை அவர் பீகாரிலேயே செய்யட்டும், தமிழ்நாட்டில் அத்தகைய நயவஞ்சக எண்ணத்துடன் வர வேண்டாம். எங்கள் கழகத் தலைவர் முன்வைக்கும் திராவிட மாடல் வழியாக 2024-இல் ஒன்றியத்தில் மதச்சார்பற்ற - முற்போக்குச் சக்திகளின் அரசு அமையும். வடமாநிலங்களில் பரவி வரும் பெரியாரிய - அம்பேத்கரிய - மார்க்சிய சிந்தனையும், அது அம்மாநிலத்தில் வாழும் நமது சகோதர - சகோதரிகளிடையே ஏற்படுத்தி வரும் அரசியல் விழிப்புணர்வும் அதற்குக் கட்டியம் கூறுகின்றன. அப்போது பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கும் சேர்ந்தே விடியும்! அந்த விடியலில் பொய்களும் பொய்களுக்குத் துணைப் போகும் போலிகளும் மக்களால் தண்டிக்கப்பட்டிருப்பார்கள்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai Vs Nainar: அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு - அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?
அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு - அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?
சென்னையிலே மிகவும் ஆபத்தான சாலை எது தெரியுமா? ஒரே ஆண்டில் இத்தனை விபத்துகளா?
சென்னையிலே மிகவும் ஆபத்தான சாலை எது தெரியுமா? ஒரே ஆண்டில் இத்தனை விபத்துகளா?
PBKS vs MI: குவாலிஃபயருக்கு மல்லுகட்டு! ரன்மழை பொழியுமா பல்தான் பாய்ஸ்? பந்துவீச்சில் மிரட்டுமா பஞ்சாப்?
PBKS vs MI: குவாலிஃபயருக்கு மல்லுகட்டு! ரன்மழை பொழியுமா பல்தான் பாய்ஸ்? பந்துவீச்சில் மிரட்டுமா பஞ்சாப்?
Nilgiris Heavy Rain: மூடப்பட்ட சுற்றுலா தளங்கள்.. மிதக்கும் ஊட்டி.. தத்தளிக்கும் மக்கள்! விடாமல் அடிக்கும் மழை
Nilgiris Heavy Rain: மூடப்பட்ட சுற்றுலா தளங்கள்.. மிதக்கும் ஊட்டி.. தத்தளிக்கும் மக்கள்! விடாமல் அடிக்கும் மழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Electionரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aartiஓய்வை அறிவித்த தோனி?” ஒவ்வொரு வருஷமும் சவால்..” குழப்பத்தில் ரசிகர்கள் | MS Dhoni Retirementதமிழ்நாட்டில் பவன் போட்டி? அதிமுக கூட்டணியில் ஜனசேனா! பாஜக பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Vs Nainar: அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு - அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?
அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு - அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?
சென்னையிலே மிகவும் ஆபத்தான சாலை எது தெரியுமா? ஒரே ஆண்டில் இத்தனை விபத்துகளா?
சென்னையிலே மிகவும் ஆபத்தான சாலை எது தெரியுமா? ஒரே ஆண்டில் இத்தனை விபத்துகளா?
PBKS vs MI: குவாலிஃபயருக்கு மல்லுகட்டு! ரன்மழை பொழியுமா பல்தான் பாய்ஸ்? பந்துவீச்சில் மிரட்டுமா பஞ்சாப்?
PBKS vs MI: குவாலிஃபயருக்கு மல்லுகட்டு! ரன்மழை பொழியுமா பல்தான் பாய்ஸ்? பந்துவீச்சில் மிரட்டுமா பஞ்சாப்?
Nilgiris Heavy Rain: மூடப்பட்ட சுற்றுலா தளங்கள்.. மிதக்கும் ஊட்டி.. தத்தளிக்கும் மக்கள்! விடாமல் அடிக்கும் மழை
Nilgiris Heavy Rain: மூடப்பட்ட சுற்றுலா தளங்கள்.. மிதக்கும் ஊட்டி.. தத்தளிக்கும் மக்கள்! விடாமல் அடிக்கும் மழை
Corona Cases in India: ‘மக்களே உஷார்‘ இந்தியாவில் 1000-த்தை கடந்த கொரோனா பாதிப்பு - எத்தனை பேர் பலி தெரியுமா.?
‘மக்களே உஷார்‘ இந்தியாவில் 1000-த்தை கடந்த கொரோனா பாதிப்பு - எத்தனை பேர் பலி தெரியுமா.?
CM Stalin Salem Visit: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் சேலம் வருகை... ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்து வைக்கிறார்
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் சேலம் வருகை... ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்து வைக்கிறார்
TVK Vijay: 10, 12 ம் வகுப்பு மாணவர்களே! கல்வி விருது வழங்கப்போகும் விஜய் - எப்போது? எங்கே?
TVK Vijay: 10, 12 ம் வகுப்பு மாணவர்களே! கல்வி விருது வழங்கப்போகும் விஜய் - எப்போது? எங்கே?
ஆபரேஷன் சிந்தூரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி..நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிற்கு குவியும் பாராட்டு
ஆபரேஷன் சிந்தூரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி..நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிற்கு குவியும் பாராட்டு
Embed widget