இளம் தம்பதியருக்கு முதியவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும் - சென்னை மகளிர் நீதிமன்றம்
இளம் தம்பதியர் வாழ்க்கை நடத்த வீட்டில் இருக்கும் முதியவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இளம் தம்பதியர் வாழ்க்கை நடத்த வீட்டில் இருக்கும் முதியவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
போலி வேலை, குடிப்பழக்கம் காரணமாக கணவன் - மனைவி இடையேயான தகராறு, வரதட்சணை கொடுமையாக மாறியதால், மனமுடைந்த பிரியா 2013-ல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்கு சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தொடரப்பட்டு, சென்னை மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதில் கணவர் குமரவேல் மற்றும் மாமியார் மலர்கொடி ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை, தலா ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கினை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதி முகமது பாரூக் கூறியதாவது, “இளம் தம்பதியர் வாழ்க்கை நடத்த வீட்டில் இருக்கும் முதியவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும். அகங்காரம், கொடூர மனம் ஆகியவற்றால் குற்றவாளிகள் ஆகக்கூடாது” எனத் தெரிவித்தார்.
குமரவேல் மற்றும் பிரியா இருவரும் திருமண பந்தத்தில் இணைந்த நாளில் இருந்து சில நாட்கள் இருவருக்கும் இடையே எவ்வித தகராறும் இல்லாமல் இருந்திருக்கிறது. இந்நிலையில் நாட்கள் செல்ல செல்ல, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகியிருக்கின்றன. இதோடு மாமியார் மற்றும் அவரது வீட்டில் பெண்ணிடம் வரதட்சணை கேட்க தொடங்கியுள்ளனர். பிரியாவிற்கு தான் திருமணமாகி வந்த வீட்டில் பிரச்சினைகளும் கொடுமையும் அதிகரிக்க தொடங்கியாதால், அதை தாங்க முடியாத பிரியா, மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். கடந்த 2013 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கிற்கு இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
இளம்தம்பதியர்கள் மகிழ்ச்சியுடன் வாழ வீட்டில் இருக்கும் முதியவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்