மேலும் அறிய

10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்; அரசிடம் இருந்து வெளியான முக்கிய அறிவிப்பு

10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்வது தொடர்வது அரசுத் தேர்வுகள் இயக்ககத்திடம் இருந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பத்தாம்‌ வகுப்பு மதிப்பெண்‌ சான்றிதழில்‌ பெயர்‌/ பிறந்த தேதி/பெற்றோர்‌ பெயர்‌ திருத்தம்‌ கோரி பெறப்படும்‌ விண்ணப்பங்களுடன்‌ இணைத்தனுப்பும்‌ ஆவணங்களின்‌ விவரம்‌ தெரிவித்தல்‌ தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககத்தின் இணை இயக்குநர்‌ கே.பி.மகேஸ்வரி, அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும் இதுகுறித்து சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.

என்னென்ன இணைப்புகள் அவசியம்?

பத்தாம்‌ வகுப்பு மதிப்பெண்‌ சான்றிதழில்‌ பெயர்‌/ பிறந்த தேதி/ பெற்றோர்‌ பெயர்‌ திருத்தம்‌ மேற்கொள்ள தங்கள்‌ அலுவலகங்களில்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்களுடன்‌ கீழ்க்காண்‌ இணைப்புகள்‌ இணைக்கப்பட்டால்‌ மட்டுமே அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககத்திற்கு பரிந்துரை செய்து அனுப்புமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

அவ்வாறு கீழ்க்காண்‌ இணைப்புகள்‌ இல்லாத பட்சத்தில்‌, தங்கள்‌ அலுவலக அளவிலேயே விண்ணப்பங்களை நிராகரித்து, சரியான ஆவணங்களை இணைத்து வழங்கும்படி மாணவர்களை அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேர்வர்‌ பெயர்‌ / பெற்றோர்‌ பெயர்‌ திருத்தம்‌

  1. அசல்‌ பத்தாம்‌ வகுப்பு மதிப்பெண்‌ சான்றிதழ்‌
  2. பத்தாம்‌ வகுப்பு மாற்றுச்‌ சான்றிதழ்‌ (டி.சி.) அசல்‌ / தலைமை ஆசிரியரால்‌ சான்றொப்பமிடப்பட்ட மாற்றுச்‌ சான்றிதழ்‌ நகல்‌
  3. தலைமை ஆசிரியரது கடிதம்‌ மற்றும்‌ கல்விச்‌ சான்றிதழ்‌

பிறந்த தேதி திருத்தம்‌

  1. அசல்‌ பத்தாம்‌ வகுப்பு மதிப்பெண்‌ சான்றிதழ்‌
  2. பள்ளி சேர்க்கை விண்ணப்பம்‌
  3. பள்ளி சேர்க்கை நீக்கப்‌ பதிவேடு
  4. பத்தாம்‌ வகுப்பு மாற்றுச்‌ சான்றிதழ்‌ (டி.சி.)
  5. தலைமை ஆசிரியரது கடிதம்‌ மற்றும்‌ கல்விச்‌ சான்றிதழ்
  6. பிறப்புச் சான்றிதழ்‌ நகல்‌

அரசிதழின்படி பெயர் மாற்றம் செய்யக்கோரும் தேர்வு

பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பன்னிரண்டாம்‌ வகுப்பு பொதுத் தேர்வெழுதி மதிப்பெண்‌ சான்றிதழ்களையும்‌ பெற்றுக்‌ கொண்ட பின்னர்‌ தமிழ்நாடு அரசிதழில்‌ பெயர்‌ மாற்றம்‌ செய்து வெளியிடப்பட்டிருப்பினும்‌, அவ்வெளியீட்டின்படி மதிப்பெண்‌ சான்றிதழ்களில்‌ திருத்தம்‌ மேற்கொள்ள தமிழ்நாடு இடைநிலைக் கல்விச்‌ சான்று தேர்வுத் திட்ட விதிகளின்படி வழிவகை இல்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget