தீபாவளி கொண்டாட்டம்; பட்டாசுகளை பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்த ஆட்டோ ஓட்டுனர் - சீர்காழியில் நெகிழ்ச்சி சம்பவம்
சீர்காழி அருகே தனது ஆட்டோவில் பள்ளிக்கு வந்து செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் ஆட்டோ ஓட்டுனர் தீபாவளி பரிசளித்து நெகிழ வைத்துள்ளார்.
சீர்காழி அருகே தனது ஆட்டோவில் பள்ளிக்கு வந்து செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் ஆட்டோ ஓட்டுனர் தீபாவளி பரிசளித்ததுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அண்ணங்கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமுருகன். இவர் சொந்தமாக மூன்று ஆட்டோக்கள் வைத்து தொழில் நடத்தி வருகிறார். தனது ஆட்டோவில் அண்ணன்கோயில் கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்களை குறைந்த கட்டணத்தில் காலை, மாலை இருவேளையும் அழைத்து வந்து சீர்காழி நகர் பகுதியில் உள்ள பள்ளிகளில் விட்டு செல்கிறார்.
Diwali Special : தீபாவளிக்கு இந்த அட்டகாசமான இனிப்பை ட்ரை பண்ணி பாருங்க... ஜில் ஜிலேபி ரெசிபி இதோ...
மாணவர்களை மகிழ்வித்த ஆட்டோ ஓட்டுனர்:
இவர் ஆட்டோவில் சுமார் 20 குழந்தைகள் வரை பயணித்து நாள்தோறும் பள்ளி சென்று வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி திருநாள் அன்று குழந்தைகள் புஷ்வானம், சங்கு சக்கரம், மத்தாப்பு, பாம்பு மாத்திரை, சாட்டை மற்றும் வெடி பொருட்களை வெடிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைவது வழக்கம். அதற்காக தனது ஆட்டோவில் பயணம் செய்யும் பள்ளி குழந்தைகளை மகிழ்ச்சி படுத்த நினைத்த ஆட்டோ உரிமையாளரும், ஓட்டுனாரமான திருமுருகன் அனைத்து மாணவர்களுக்கும் பட்டாசு கிஃப்ட் பாக்ஸை பரிசாக வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட மாணவர்கள் சந்தோஷத்தில் மகிழ்ந்தனர். ஆட்டோ ஓட்டுனரின் இந்த செயல் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
Diwali 2023: "தயவு செய்து பட்டாசு வெடிக்க வேண்டாம்" - சேலம் மாமன்ற உறுப்பினரின் உருக்கமான வேண்டுகோள்
குவியும் பாராட்டுகள்:
மேலும் பொதுமக்கள் மத்தியில் ஆட்டோக்காரர்கள் என்றாலே அதிக கட்டணம் வசூல் செய்வதும், அதிக கட்டணம் வாங்குவதற்காக செல்ல வேண்டிய இடத்திற்கு நேராக செல்லாமல் சுற்றி வளைத்து அழைத்துச் செல்வார்கள் போன்ற பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை கூறும் நிலையில், பள்ளி மாணவர்களை குறைந்த கட்டணத்தில் நாள்தோறும் அழைத்துச் செல்வது மட்டுமின்றி அவர் ஈட்டும் சொற்ப ஊதியத்தில் அவர்களுக்கு தீபாவளி பரிசையும் வழங்கிய இந்த ஆட்டோ ஓட்டுனர் திருமுருகனின் செயல் கேட்பவர்களை ஆச்சரியத்தில் ஆற்றுவது மட்டுமல்லாமல் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றன.