TN Rain: இன்று இரவு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: லிஸ்ட் இதோ.!
Tamilnadu Weather Updates: தமிழ்நாட்டில் இன்று இரவு கோவை , ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று இரவு கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து பார்ப்போம்.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) March 3, 2025
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை:
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
03-03-2025: தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
04-03-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
05-03-2025 முதல் 09-03-2025 வரை; தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
Also Read: CM Stalin: “உடனே குழந்தை பெற்றுக்கோங்க”- முதல்வர் ஸ்டாலின்; மணமக்களுக்கு வாழ்த்தோடு அரசியல் தூவல்..
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:
03-03-2025 முதல் 07-03-2025 வரை; அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை
உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 3டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் ஏனைய இடங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 31 முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 30 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

