மேலும் அறிய

TN TRB: ஆசிரியர் தேர்வு வாரியம் அசத்தல் அறிவிப்பு; உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

TN TRB Assistant Professor 2025: சட்டக்‌ கல்லூரிகளில் உதவிப்‌ பேராசிரியர்‌ பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மார்ச் 3ஆம் தேதியோடு முடிந்த நிலையில், அவகாசம் மார்ச் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

அரசு சட்டக்‌ கல்லூரிகளில் 132 இணைப்‌ பேராசிரியர்‌, உதவிப்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ உதவிப்‌ பேராசிரியர்‌ (சட்ட முன்‌ படிப்பு) பணி இடங்களுக்காக, தேர்வர்கள் ஜனவரி 31ஆம் தேதி முதல் விண்ணப்பித்து வந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை டிஆர்பி நீட்டித்துள்ளது.

இதில், இணைப் பேராசிரியர்- 8 இடங்கள், உதவிப் பேராசிரியர்- 64 இடங்கள், உதவிப்‌ பேராசிரியர்‌ (சட்ட முன்‌ படிப்பு)- 60 என மொத்தம் 132 காலி இடங்கள் உள்ளன.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

சட்டத்தில் முதுகலைப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்களைப் பெறலாம். எஸ்சி, எஸ்டி தேர்வர்கள் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் போதுமானது. எனினும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தனித் தேர்வராகவோ, தொலைதூரக் கல்வி முறையிலோ தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. 

குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் சட்டக் கல்லூரியில் பணியாற்றி இருக்க வேண்டும்.

மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு அல்லது மாநில ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

மார்ச் 15 வரை அவகாசம் நீட்டிப்பு

இந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மார்ச் 3ஆம் தேதியோடு முடிந்த நிலையில், அவகாசம் மார்ச் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘’உதவிப்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ உதவிப்‌ பேராசிரியர்‌ (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு போட்டித்‌ தேர்வு மூலம்‌ நேரடி நியமனம்‌ செய்வதற்கு அறிவிக்கை எண்‌. 01, 2025 , நாள்‌. 24.01.2025 வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள்‌ இணைய வழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில்‌, விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின்‌ அடிப்படையில்‌ இணைப்‌ பேராசிரியர்‌, உதவிப்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ உதவிப்‌ பேராசிரியர்‌ (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள்‌ பெறுவதற்கான கடைசி தேதி 03.03.2025-ல் இருந்து, 15.03.2025 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது’’ என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் https://www.trb.tn.gov.in என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யவும்.

சரியான இ- மெயில் முகவரி, மொபைல் எண் ஆகியவை விண்ணப்பிக்க முக்கியம்.

இணைப் பேராசிரியர் பதவிக்கு 2 பாடங்களுக்கு 2 படிவங்களைக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.

விரிவான விவரங்களை https://trb.tn.gov.in/admin/pdf/756485331TRB%20-%20Final%20Notification-%2024-1-2025.pdf என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து அறியலாம்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
அரசுப் பள்ளி ஆய்வு அராஜகம்: அமைச்சர் கீர்த்தனா மீது நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்!
அரசுப் பள்ளி ஆய்வு அராஜகம்: அமைச்சர் கீர்த்தனா மீது நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்!
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்

வீடியோ

TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
E.V.Velu Asset : ‘திமுக குடும்பத்தின் கஜானா – ஏவ வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
'ஏ.வ.வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
Minister Keerthana: கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
Sierra QWD Vs RWD: டாடா சியரா EV வாங்கப் போறீங்களா.? QWD-ஆ.? RWD-ஆ.? உங்க பணத்துக்கு மதிப்பான சிறந்த மாடல் எது.? ஒப்பீடு
டாடா சியரா EV வாங்கப் போறீங்களா.? QWD-ஆ.? RWD-ஆ.? உங்க பணத்துக்கு மதிப்பான சிறந்த மாடல் எது.? ஒப்பீடு
Director Mohan G: தமிழகம் முழுக்க நாடக காதல்.. உடனே பெற்றோருக்கு உதவி பண்ணுங்க.. கொந்தளித்த மோகன் ஜி!
Director Mohan G: தமிழகம் முழுக்க நாடக காதல்.. உடனே பெற்றோருக்கு உதவி பண்ணுங்க.. கொந்தளித்த மோகன் ஜி!
TN Govt Lawyer: அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
Embed widget