ஏப்ரல் 30 வரை சென்னையில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை - மாநகர காவல் ஆணையர் உத்தரவு..

முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் அறிவித்தார்

FOLLOW US: 

கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளின் தொகுப்புகளை இங்கே காணலாம்.   

1. கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, இந்தியத் தொல்லியல் ஆய்வகம் கட்டுப்பாட்டில் இருக்கும் மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், இடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மே 15 வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

2. கோவிட் 19 கட்டுப்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.  

3. உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளுக்கு எதிர்வரும் 17,18 மற்றும் 19-ஆம் தேதிகளில்  டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படவுள்ள எழுத்துத் தேர்வுகளை ஒத்திவைக்கவேண்டும் என விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் கேட்டுக் கொண்டார். 

4. முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் அறிவித்தார்.

5. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஏப்ரல் 30-ஆம் தேதி மாலை 3 மணிவரை பொது மக்கள் கூடுவது, மனிதச் சங்கிலி, பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை நடத்த தடைவிதித்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். ஏப்ரல் 30 வரை சென்னையில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை - மாநகர காவல் ஆணையர் உத்தரவு..

6. உயர்நிலை பள்ளிகள் மற்றும் இடைநிலை கல்வி வாரியத்தின் தேர்வுகள் அடுத்த மாதம் 20ம் தேதிவரை ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

7. கோவிட் 19 கட்டுப்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று ஆலோசனை நடத்தினார்.

8. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். 

9. தமிழகத்தில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அரியர் தேர்வுகள் மே மாதம் முதல் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

10. நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி டெல்லி அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.     

Tags: Tamil Nadu News updates Morning Breaking news LAtest news in tamil Tamil nadu latest news updates April 16 Morning News Updates

தொடர்புடைய செய்திகள்

TN Corona updates: தமிழ்நாட்டில் 11,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

TN Corona updates: தமிழ்நாட்டில் 11,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!

Black Fungus | கோவையில் 123 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு : அதிகரிக்கும் அச்சம்..!

Black Fungus | கோவையில் 123 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு : அதிகரிக்கும் அச்சம்..!

பார்டர் தாண்டிச்செல்லும் மதுப்பிரியர்கள் : காவல்துறையினர் வைத்திருக்கும் கெடுபிடி ப்ளான்..!

பார்டர் தாண்டிச்செல்லும் மதுப்பிரியர்கள் : காவல்துறையினர் வைத்திருக்கும் கெடுபிடி ப்ளான்..!

பி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு? - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு

பி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு? - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு

டாப் நியூஸ்

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

Aspire Swaminathan | அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்..!

Aspire Swaminathan | அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்..!