"காலம் மாறும்! பதில் சொல்லத் தயாரா இருங்க" அமைச்சர் சேகர்பாபுவிற்கு அண்ணாமலை கண்டனம்
திருச்செந்தூரில் மணிக்கணக்கில் காத்திருந்த பக்தர்கள் குறித்து கருத்து கூறிய சேகர்பாபுவிற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கடவுளாக போற்றி வணங்கப்படும் முருகனின அறுபடை வீடுகளில் மிகவும் புகழ்பெற்றது திருச்செந்தூர் முருகன் கோயில். விசேஷ நாட்கள் மட்டுமின்றி வழக்கமான நாட்களிலும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.
காத்திருந்த பக்தர்கள்:
இந்த நிலையில், பொங்கல் விடுமுறை என்பதால் திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் அவர்களுக்கான காத்திருப்பு அறையில் 6 மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு உரிய உணவு, தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் பக்தர்கள் வைத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வி எழுப்பியபோது, "அவர் திருப்பதியில் மட்டும் 24 மணி நேரம் நிப்பான் என்று பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர் சேகர்பாபுவிற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒருமையில் பேசிய சேகர்பாபு:
இதுதொடர்பாக, அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கண்டனத்தில் நேற்றைய தினம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ஆறு மணி நேரத்திற்கும் அதிகமாக, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பக்தர்களை, உணவு, தண்ணீர் இன்றி, அடைத்து வைத்திருக்கின்றார்கள். இது குறித்து பக்தர்கள் புகார் தெரிவித்தபோது, “திருப்பதி கோவிலில் மட்டும் 24 மணி நேரம் நிற்பான்” என்று ஒருமையில் அலட்சியமாகப் பதில் அளித்திருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு.
நேற்றைய தினம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ஆறு மணி நேரத்திற்கும் அதிகமாக, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பக்தர்களை, உணவு, தண்ணீர் இன்றி, அடைத்து வைத்திருக்கின்றார்கள். இது குறித்து பக்தர்கள் புகார் தெரிவித்தபோது, “திருப்பதி கோவிலில் மட்டும் 24 மணி… pic.twitter.com/uI3gREWDeh
— K.Annamalai (@annamalai_k) January 19, 2025
திருப்பதி கோவிலில் பொதுமக்களுக்கு உணவு, தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட போதிய வசதிகள் செய்திருக்கிறார்கள். உங்களைப் போல, கோவில் உண்டியல் பணத்தை முறைகேடாகச் செலவழிப்பதில்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் நேர்மையான உழைப்பில் கிடைக்கும் பணத்தில் சிறு பகுதியை, கோவில்களுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறார்கள். உங்களைப் போல, கோவில் பிரசாதத்தில் கமிஷன் அடிப்பதில்லை.
பதில் சொல்லத் தயாராக இருங்கள்:
கோபாலபுரம் குடும்பத்திற்கு நெருக்கம் என்ற ஆணவத்தில் ஆடிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு. இதை விட அதிகார மமதையில் ஆடியவர்களுக்கெல்லாம், காலம் பாடம் புகட்டியிருக்கிறது என்பதை அமைச்சருக்கு நினைவுபடுத்துகிறேன். காலம் மாறும். தனது ஒவ்வொரு தவற்றுக்கும், அமைச்சர் சேகர்பாபு, ஆண்டவனுக்கும், பொதுமக்களுக்கும் பதில் சொல்லத் தயாராக இருந்து கொள்ளட்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தபோது, பக்தர் ஒருவர் கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் என்று கோஷங்கள் எழுப்பியபோது அதற்கு மிக அருகில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், காவல்துறை இருந்தனர். மேலும், அப்போது அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ஆகியோர் வருகை தந்தனர். அப்போதுதான் சேகர்பாபு இந்த கருத்தை தெரிவித்துவிட்டுச் சென்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

