மேலும் அறிய
Advertisement
மதுரை மலர் சந்தையில் மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.3000க்கு விற்பனை
மழை பொழிவு காரணமாகவும் வரத்து குறைந்து பூக்களின் விலை தொடர்ந்து உச்சத்தில் நீடிக்கிறது.
தென் மாவட்டங்களில் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை மிக முக்கியமானது. பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு பூக்களை வாங்கிச் செல்கின்றனர். மதுரை மலர் சந்தையில் இருந்து தான் பல்வேறு இடங்களுக்கும் விமானம் மூலம் மலர்கள் அனுப்பப்படுகிறது.
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் இன்று பூக்கள் நிலவரம் !#மல்லிப்பூ கி. 3000#பிச்சிப்பூ கி. 1000#முல்லைப்பூ கி.1000#சம்பங்கி கி.80#செண்டு மல்லி கி.60#செவ்வந்தி கி.70#கனகாம்பரம் கி. 800
— arunchinna (@arunreporter92) December 10, 2022
Further reports to follow - @abpnadu
| #madurai | | @SRajaJourno | ........ pic.twitter.com/7f8TOA5A2l
முதல் ரக மலர்கள் மதுரையில் கிடைப்பதால் பலரும் மதுரையில் கிடைக்கும் மலர்களை வாங்க விரும்புகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மலர்களின் விலை தொடர்ந்து அதிகரித்திருந்தது. தற்போது மழை பொழிவு காரணமாகவும் வரத்து குறைந்து பூக்களின் விலை தொடர்ந்து உச்சத்தில் நீடிக்கிறது.
அதன்படி மல்லிகைப் பூ விலை கிலோவிற்கு மூவாயிரமும், பிச்சிப்பூ ஆயிரம் ரூபாயும், முல்லைப் பூ ஆயிரம் ரூபாயகவும், சம்மங்கி 80 ரூபாயாகவும், செண்டு மல்லி 80 ரூபாயாகவும், செவ்வந்தி 70 ரூபாயாகவும், கனகாம்பரம் 800 ரூபயாகவும் விற்பனையாகிறது.
மற்றும் ரயில்வே செய்திகள்
பாலருவி ரயில் ரத்து
கேரள மாநிலம் சாலக்குடி அருகே ரயில் பாலம் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று சனிக்கிழமை (10.12.2022) திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய பாலக்காடு பாலருவி விரைவு ரயிலும் (16791) நாளை (11.12.22) ஞாயிற்றுக்கிழமை பாலக்காட்டில் இருந்து புறப்படும் திருநெல்வேலி பாலருவி ரயில் (16792) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Crime : கோவையில் லாட்டரி விற்றவர் கைது..! 2140 கேரளா லாட்டரி சீட்டுகள் பறிமுதல்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion