மேலும் அறிய

Seeman: விஜயுடன் கூட்டணியா..? - சீமான் சொல்வது என்ன?

ஆட்சி அதிகாரத்தில் இருந்த பெரிய பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்த போதே நான் செல்லவில்லை, ஆகவே தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பது சரியாக வராது என மதுரையில் சீமான் பேட்டி

நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள திமுக தெருவில் ஏன் இறங்கி போராடுகிறார்கள். மீனவர்கள் கைது, இந்தி திணிப்பு, நிதி ஒதுக்கீடு விவகாரங்களில் ஏன் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராடுகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
சீமான் செய்தியாளர் சந்திப்பு

மதுரையில் நாம் தமிழர் கட்சியின் விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "மும்மொழி கொள்கையில் திமுக, அதிமுகவின் நிலைப்பாடு என்ன?, மும்மொழி கொள்கையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?, முதன் முதலில் இந்தியை திணித்தது யார். இந்தியை திணித்தவர்களிடம் திமுக கூட்டணி வைத்து வெற்றி பெற்றுள்ளது. திராவிட கட்சிகளின் ஆட்சியில் எந்த இடத்தில் இந்தி இல்லை?, ஒரே நாட்டில் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்பதுதான் இந்த நாட்டின் சிறப்பு. இந்த நாட்டை பாஜக துண்டிக்க துடிக்கிறது.
 
திராவிடர்களை நம்ப வேண்டாம்

இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் மொழி வழியாக மாநிலங்கள் எதற்காக பிரிக்கப்பட்டது? இந்தி மொழி பயில வேண்டும் என்றால் அதற்கான சிறப்பு காரணங்கள் என்ன?, இந்திய மொழி இந்தி என எந்த சாசனத்தில் உள்ளது, இந்தியா பழமொழி பேசும் மக்கள் ஒன்றிணைந்த ஐக்கியம், இந்திய மொழி இந்தி என எந்த பைத்தியக்காரன் சொன்னது. இந்தி மொழி கற்பித்தல் மிகவும் ஆபத்தானது. நாடு எங்கும் இந்தி மொழியை திணிப்பது தேவையற்றது. இரண்டு மூன்று மாநிலங்களில் பேசக்கூடிய இந்தி மொழியை திணிக்க நினைப்பது தவறு. இந்தி மொழி தேவையெனில் கற்றுக் கொள்ளலாம். இந்தி மொழி விவகாரத்தில் திராவிடர்களை நம்ப வேண்டாம். இந்தி மொழியை திமுக உளமார எதிர்க்கிறதா?, இந்தி திணிப்புக்கு எதிராக 800 பேர் போராடினார்கள், ஆனால் 18 பேர் என கணக்கு காட்டினார்கள், இந்தியா வளர்ந்த நாடா இன்னும் மக்கள் பசி பட்டினியுடன் உள்ளனர். ஆங்கிலம் படிப்பது தான் அறிவு என பொதுப்புத்தி உருவாகி உள்ளது. இந்தி படித்தால் அடுத்த கட்ட வளர்ச்சி என்றால் வட மாநிலத்தில் இருந்து ஒன்றரை கோடி மக்கள் ஏன் தமிழகத்திற்கு வேலைக்காக வருகிறார்கள்.
 
சர்வாதிகாரியாக செயல்படுவேன்

இலங்கை, பங்களாதேஷில் நடந்தது இந்தியாவில் நடக்கும். ஏதாவது மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம், திராவிடன் அரியணையில் உட்கார வைக்க வட இந்தியர்தான் தேவைப்படுகிறார். தேர்தல் வியூகங்களுக்கு வட இந்தியர்களுக்கு பதிலாக இங்குள்ள ஹெச்.ராஜா, ரங்கராஜ் பாண்டேவை பயன்படுத்தலாமே?, நான் நோட்டுக்காக, சீட்டுக்காக அரசியலுக்கு வரவில்லை, நம் நாட்டுக்காக அரசியலுக்கு வந்துள்ளேன். தன்னை முன் நிறுத்தி கொள்பவர்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி செல்கிறார்கள். நாம் தமிழர் கட்சியில் கட்சிக்காக நான், எனக்காக கட்சி என செயல்பட வேண்டும். சீமானுக்கு பின் யார் தலைவர் எனும் போட்டியால் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள். நேர்மையாக கட்சி நடத்த வேண்டுமானால் சர்வாதிகாரியாக செயல்படுவேன்.
 
தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பது சரியாக வராது 

நான் குட்டை, குளத்தில் வலை வீசவில்லை, தமிழ் தேசியம் எனும் பெருங்கடலில் வலை வீசுகிறேன். வருண் ஐ.பி.எஸ் கட்சிக்காரன் போல பேசுகிறார். தேவையில்லாமல் சீண்டினால் வெறி வரும், வருண் ஐ.பி.எஸ் அதிகாரியின் வேலையே செல்போனை திருடுவது தான். வருண் ஐ.பி.எஸ் கடமை செய்வதை விட்டுவிட்டு கட்சிக்காரன் போல செயல்படுகிறார்.  காவல்துறை உயரதிகாரிகள் வருண் ஐபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள திமுக தெருவில் ஏன் இறங்கி போராடுகிறார்கள். மீனவர்கள் கைது, இந்தி திணைப்பு, நிதி ஒதுக்கீடு விவகாரங்களில் ஏன் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராடுகிறது. திராவிடம் பேசாமல் பெரியார் குறித்து பேசாமல் நான் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்துள்ளேன். ஆட்சி அதிகாரத்தில் இருந்த பெரிய பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்த போதே நான் செல்லவில்லை. ஆகவே தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பது சரியாக வராது" என கூறினார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget