மேலும் அறிய

கூரியர் மூலம் போதைப்பொருள் கடத்த முயன்ற வழக்கில் மூவருக்கு ஜாமீன் ரத்து - மதுரை உயர்நீதிமன்றம்

இந்த வழக்கை 5 மாதங்களுக்குள்ளாக கீழமை நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும். தவறினால் மனுதாரர்கள் மீண்டும் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கலாம் - உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை

கூரியர் மூலம் போதைப்பொருள் கடத்த முயன்ற வழக்கில், மதுரையைச் சேர்ந்த முருகேசன், மணிகண்டன், மேனன் என்ற விஜி ஆகிய மூவரின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த முருகேசன், மணிகண்டன், மேனன் என்ற விஜி ஆகியோர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், "கூரியர் மூலமாக 620 கிராம் போதை பொருளை கடத்த முயன்றதாக மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்கள் தங்களுக்கு இதில் தொடர்பு இல்லை என கூறினாலும் ஏற்கத்தக்க வகையில் அவர்களது விளக்கங்கள் இல்லை.

மணிகண்டன் முருகேசன் என்பவரது நண்பர் மட்டுமே, இந்த வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை. 206 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதாக கூறி ஜாமீன் கோரியுள்ளார். ஆனால் வழக்கு விசாரணையின் போது மணிகண்டன் இது தொடர்பான விபரங்களை முழுமையாக அறிந்தே முருகேசனுக்கு உதவியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மனுதாரர்களுக்கு இந்த சம்பவத்தில் எந்த தொடர்பும் இல்லை எனும் அடிப்படையில் மட்டுமே அவர்களது கோரிக்கையை பரிசீலிக்க முடியும். இந்த வழக்கில் நிலை அப்படியல்ல எனக்கூறி மனுதாரர்களின் ஜமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கை 5 மாதங்களுக்குள்ளாக கீழமை நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும். தவறினால் மனுதாரர்கள் மீண்டும் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 


மற்றொரு வழக்கு

தூத்துக்குடி கண்ணடியான் கால்வாயின் வெள்ளநீரை, வறட்சி மிகுந்த சாத்தான்குளம், திசையன்விளை உள்ளிட்ட கிராமங்களுக்கு கொண்டு சென்று விவசாயத்திற்கு பயன்படுத்தும் திட்டத்திற்கான, நில கையகப்படுத்துதல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த திருமணி தர்மராஜ், பட்டுத்துரை, அருள்வேல், கணேசன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நில கையகப்படுத்துதல் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும் அது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "தமிழக அரசு வெள்ள நீரை ஆக்கப்பூர்வமாக கையாளும் விதமாக கண்ணடியான் கால்வாயின் வெள்ளநீரை, வறட்சி மிகுந்த சாத்தான்குளம், திசையன்விளை உள்ளிட்ட கிராமங்களுக்கு கொண்டு சென்று விவசாயத்திற்கு பயன்படுத்தும் விதமாக ஒரு திட்டத்தை கொண்டு வந்தது. இதற்காக அப்பகுதி மக்களின் நிலங்கள் அரசு விதிப்படி கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பான அறிவிப்பு முறையாக அரசிதழில் வெளியிடப்படவில்லை மற்றும் மாற்று வழி குறித்து பரிசீலிக்கப்படவில்லை ஆகிய இரு காரணங்களை குறிப்பிட்டு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அறிவிப்பை ரத்து செய்யுமாறு மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது.

அரசுத் தரப்பில், "நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அறிவிப்பு, தூத்துக்குடி மாவட்ட அரசிதழில் கடந்த 2020 டிசம்பர் 8ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட அரசிதழ்களும், தமிழக அரசின் வரம்புக்குட்பட்டதே. அதேபோல நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால், அருகில் இருக்கும் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை மாற்றிடமாக பரிசீலித்துள்ளனர். ஆனால் அவ்வழி பொருத்தமானதாக அமையாது.  இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில், மனுதாரர்கள் தங்களது நிலத்தை வழங்காத காரணத்தினாலேயே அது கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த வழக்கை பொறுத்தவரை, மனுதாரர்கள் தரப்பில் முன் வைக்கப்படும் வாதங்கள் ஏற்கத்தக்கதாக அல்ல எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தும், இதனோடு தொடர்புடைய வழக்குகளை முடித்து வைத்தும் உத்தரவிட்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget