மியான்மார் நிலநடுக்க நிவாரணத்திற்கு VIT போபால் தாராள நன்கொடை
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு நிவாரண தொகையாக 10 லட்சம் ரூபாயை வழங்கி உள்ளது VIT போபால் பல்கலைக்கழகம்.

மியான்மரில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்துக்குப் பிறகு நிவாரண நடவடிக்கைகளை ஆதரிக்க வேலூர் தாெழில்நுட்பக்கழகத்தின் (VIT) உதவி துணை தலைவரான செல்வி காதம்பரி ச. விஸ்வநாதன் 2,45,92,500 மியான்மார் கியாட்கள் (இந்திய மதிப்பில் ரூ. 10 லட்சம்) நன்கொடை அளித்துள்ளார்.
இந்த நன்கொடை VIT போபால் பல்கலைக்கழகத்தின் சார்பாக வழங்கப்பட்டு, மியான்மார் குடியரசின் தூதரகத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள மத்திய தூதர் அவர்களான ஜா ஊ அவர்களிடம், கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று டெல்லியில் உள்ள தூதரக அலுவலகத்தில் நேரில் வழங்கப்பட்டது.
இந்த நன்காெடை, உலகளாவிய மனிதாபிமான காரணங்களுக்காக விஐடி போபாலின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கு எடுத்துக்காட்டாகும்.

