Morning Headlines: பிரதமர் மோடி நடத்திய நள்ளிரவு ஆலோசனைக் கூட்டம்.. மின்னணு பொருட்கள் ஏற்றுமதி - அசத்தும் தமிழ்நாடு.. முக்கியச் செய்திகள்..
Morning Headlines March 1: இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- ”எப்பவுமே சந்தோஷம் தான்” - பில்கேட்ஸ் உடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி டிவீட்
மைக்ரோசாஃப்ட் நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ் உடனான சந்திப்பில், பல்வேறு அம்சங்கள் தொடர்பாக விவாதித்தாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவரான பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்தார். அப்போது, செயற்கை நுண்ணறிவு, பெண்கள் தலைமையிலான மேம்பாடு, விவசாயத்தில் புதுமை, சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றியமைத்தல் மற்றும் இந்தியாவிலிருந்து உலகிற்கு பாடங்களை எடுத்துச் செல்வது போன்றவற்றை பிரதமர் மோடியிடம் பேசியதாக பில்கேட்ஸ் தெரிவித்தார். இந்த சந்திப்பு தொடர்பான டிவிட்டர் பதிவில், “நரேந்திரமோடியை சந்திப்பது எப்போதுமே உத்வேகம் அளிக்கிறது, மேலும் விவாதிக்க நிறைய இருந்தது” என பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க..
- மீண்டுமா..! கேஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு - தற்போதைய நிலவரம் என்ன?
சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.23.50 உயர்ந்து, தற்போது ரூ.1960.50-க்கு விற்பனையாகிறது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 23 ரூபாய் 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, வணிக சிலிண்டர் விலை தற்போது 1,960 ரூபாய் 50 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று வரை வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1,937 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வணிக கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்து வருவதால், உணவகங்களில் உணவுப் பொட்ருட்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது வெளியூர்களில் தங்கி உணவகங்களை நம்பி வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு பெரும் சுமையாய் கருதப்படுகிறது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.918க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் படிக்க..
- பிரதமர் மோடி நடத்திய நள்ளிரவு ஆலோசனைக் கூட்டம் - லிஸ்ட் ரெடி? தேர்தலுக்கான பாஜகவின் வியூகம் என்ன?
பிரதமர் மோடியின் நள்ளிரவு ஆலோசனைக் கூட்டங்களில், பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் முதல் பட்டியலை அறிவிப்பதற்காக, பாஜகவின் உயர்மட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றுள்ளது. டெல்லியில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் தொடங்கி, 4 மணி நேரம் வரை நடைபெற்றதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக தலைவர் ஜேபி நட்டா உடன் மத்திய அமைச்சர்களான அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர். மூத்த தலைவர்களான தேவேந்திர ஃபட்னாவிஸ், பிரகாஷ் ஜவடேகர், மன்சுக் மாண்டவியா, புஷ்கர் தாமி, ஜோதிராதித்ய சிந்தியா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இதனிடையே, அமித் ஷா மற்றும் நட்டா உடன், பிரதமர் மோடி தனது இல்லத்தில் தனியே ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் படிக்க..
- மின்னணு பொருட்கள் ஏற்றுமதி - அசத்தும் தமிழ்நாடு, ரூ.61,000 கோடி வணிகம் - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
மார்ச் மாதத்திற்குள் தமிழ்நாட்டின் மின்னணு ஏற்றுமதி 9 பில்லியன் டாலராக உயர்ந்து புதிய சாதனை படைக்கும் எனத் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழில் முதலீட்டு மாநாடுகள், வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். இதன் காரணமாக ஒரு தொழில் புரட்சியை நோக்கி தமிழ்நாடு அரசின் தொழில்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் தொழில் துறையில் உயர்ந்த தொழிற் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதால், மாநிலத்தின் தொழில் வளர்ச்சி விரைவுபடுத்தப்படுகிறது. மேலும் படிக்க..