விழுப்புரத்தில் வேலைவாய்ப்பு முகாம்! 500+ காலிப்பணியிடங்கள், உடனே விண்ணப்பியுங்கள்!
விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 22-08-2025 வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 22-ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தேதி : 22-08-2025 வெள்ளிக்கிழமை
இடம் : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விழுப்புரம்.
நேரம் : காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.
வயது: 18 வயது முதல் 35 வயது வரையிலான வேலை நாடுபர்கள் கலந்து கொள்ளலாம்.
கல்வி தகுதிகள் : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம்.
மேலும், 30க்கு மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான 500க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம் முகாமில் ஆண், பெண் இரு பாலரும் கலந்து கொள்ளலாம்.
மேலும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தேவையான திறன் பயிற்சியினை பெறுவது தொடர்பாக தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்குவதற்கும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெறுவது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) மூலம் ஆலோசனைகள் வேலை நாடுனர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி அவர்கள் தகுதிக்கு ஏற்ற சிறந்த ஊதியத்தில் பணி நியமன ஆணை பெறலாம்.
தங்களது கல்வித்தகுதி குறித்த விவரங்களை பதிவு செய்து இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.





















