தனுஷ் பட நடிகை பை செக்ஷுவலா.. பிரபல அரசியல்வாதி மனைவி மீது ஆசை.. வெடித்த சர்ச்சை
ராஞ்சனா படத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்த நடிகை ஸ்வரா பாஸ்கர் பிரபல அரசியல்வாதி மனைவி மீது ஆசைப்பட்டதாக கூறியது சர்ச்சயாகியுள்ளது

பாலிவுட்டில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஸ்வரா பாஸ்கர். இவர், ராஞ்சனா படத்தில் தனுஷை ஒருதலையாக காதலிப்பது போன்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பிலிம்பேர் விருதை பெற்றார். சினிமாவில் துள்ளல், குறும்புத்தனம் நிறைந்த நடிகையாகவும் இருந்தாலும், பொதுவாழ்வில் பல்வேறு விதமான சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். மனதில் பட்டதை வெளிப்படயாக பேசுவது இவரது சுபாவம். அதுவே இவருக்கு வினையாக மாறிவிடுகிறது. இந்நிலையில், தன்னை இருபாலின உறவு கொண்டவர் என வெளிப்படையாக கூறி புயலை கிளப்பியுள்ளார்.
சமீபத்தில் நடிகை ஸ்வரா பாஸ்கர் தனது கணவருடன் இணைந்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், நான் ஒரு இருபாலின உறவு கொண்டவர் என்றும், மக்களை அவர்களின் விருப்பத்திற்கு விட்டால், அனைவரும் இருபாலினத்தவர்கள் தான் எனக் கூறினார். ஸ்வரா பாஸ்கர் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தொகுப்பாளர். உங்களுக்கு யார் மீதாவது அப்படி ஒரு ஆசை உள்ளதா? இப்போது சொல்ல முடியுமா? என கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த ஸ்வரா பாஸ்கர், இந்த கேள்விக்கு பதில் அளித்தால். என் கணவர் பஹாத்தின் எதிர்காலம் உத்தர பிரதேசத்தில் கேள்விக்குறியாகும் எனக் கூறியுள்ளார்.
பின்னர் சகஜமான நிலைக்கு வந்த பின்னர் பேசிய ஸ்வரா பாஸ்கர், "நான் டிம்பிள் யாதவ் ஜியை நேரில் சந்தித்த போது அவர் மீது எனக்கு ஒரு விதமான ஈர்ப்பு ஏற்பட்டது" எனக் கூறியதும், சட்டென தொகுப்பாளர், டிம்பிள் யாதவா என கேட்க, நீங்க நினைக்கின்ற ஆள் இல்லைங்க "அகிலேஷ் யாதவ் ஜியின் மனைவி என ஸ்வரா பாஸ்கரின் கணவர் பஹத் கூறினார். அப்போது தொகுப்பாளர் செம ஷாக் ஆனார். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ஸ்வரா பாஸ்கரின் பேட்டியை பார்த்த இணையவாசிகள் கடுமையான சொற்களால் விமர்சித்து வருகின்றனர். ஸ்வரா பாஸ்கரின் கணவரையும் கண்டபடி திட்ட தொடங்கியுள்ளனர்.





















