மேலும் அறிய

மயிலாடுதுறை: திருக்குறள் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்! மாணவர்களே, இளைஞர்களே, தவறவிடாதீர்கள்!

மயிலாடுதுறை: திருக்குறள் பயிற்சி வகுப்புகள் தொடங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு - ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்க அழைப்பு

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், திருக்குறள் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. கன்னியாகுமரியில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த “திருக்குறள் திருப்பணிகள்” திட்டத்தின் ஒரு பகுதியாக, மாவட்டந்தோறும் தொடர் பயிலரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் அறிவிப்பைச் செயல்படுத்தும் முயற்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 31.12.2024 அன்று நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில்,  தமிழ்நாடு முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் திருக்குறளில் ஆர்வமும், புலமையும் மிக்க ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி அளித்து, மாவட்டம்தோறும் தொடர் பயிலரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும், “திருக்குறள் திருப்பணிகள்” தொடர்ந்து நடைபெறத் திட்டம் வகுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்

முதலமைச்சரின் அறிவிப்பைச் செயல்படுத்தும் பொருட்டு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் ஒரு சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திட்டத்தின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் குழு உறுப்பினர்களான மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (பொ) சுகன்யா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்கணியன், அரசு விருது பெற்ற ஆசிரியர்களான துரை. குணசேகரன் மற்றும் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் இரா. செல்வகுமார், மற்றும் மயிலாடுதுறைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஜெனிபர் ச. பவுல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடங்கள்

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

 

  • மயிலாடுதுறை: திருக்குறள் பேரமைப்பு சார்பில், தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

 

  • சீர்காழி: திருக்குறள் பண்பாட்டுப் பேரவை சார்பில், சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

 

  • குத்தாலம்: மயிலாடுதுறைத் தமிழ்ச் சங்கத்தின் மூலம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.


பயிற்சி அட்டவணை மற்றும் சான்றிதழ்

திருக்குறள் பயிற்சி வகுப்புகள் வரும் 23.08.2025 அன்று தொடங்கி, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடத்தப்படும். இந்த வகுப்புகள் மொத்தம் 30 வாரங்களுக்குத் தொடர்ந்து நடைபெறும். இந்தப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பவர்களுக்கு, பயிற்சியின் இறுதி நாளில் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்  வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த முயற்சி, தமிழ் மொழியின் வளம் மற்றும் திருக்குறளின் விழுமியங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
திருச்சி மாஸ் சாதனை! உயர்கல்வி சேர்க்கையில் தமிழகத்திலேயே முதலிடம்: வெற்றிக் கொடி நாட்டியது
திருச்சி மாஸ் சாதனை! உயர்கல்வி சேர்க்கையில் தமிழகத்திலேயே முதலிடம்: வெற்றிக் கொடி நாட்டியது
குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்
குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
Embed widget