மேலும் அறிய

ஸ்டண்ட் கலைஞர்களுக்கு சூர்யா உதவி செய்யவில்லை.. வெளியான அதிர்ச்சி தகவல்.. மோகன் ஜி பகிர்ந்த வீடியோ

நடிகர் சூர்யா ஸ்டண்ட் கலைஞர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்ற செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில்  உரவாகி வரும் வேட்டுவம் படத்தின் ஷூட்டிங்கில் ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்தது தமிழ் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்தில் பா.ரஞ்சித் மீதும் வழக்குப்பதிவு செய்து பின்னர் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு சூர்யா கடந்த பத்து வருடங்களாக உதவி செய்து வருவதாக சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் சில்வா சமீபத்தில் தெரிவித்திருந்தார். 

இதுதொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசி ஸ்டண்ட் சில்வா, "கடந்த பத்து வருடங்களாக ஸ்டண்ட் கலைஞர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை செலுத்தி வருகிறார். அவர் ஏற்கனவே அகரம் ஃபவுண்டேஷனை வைத்து உதவி செய்கிறார். அதே நேரத்தில் ரூ.10 லட்சம் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு கொடுத்திருக்கிறார். இதைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். ஆனால் எந்த நிகழ்ச்சியிலும் அவர் இதுகுறித்து வெளிப்படையாக சொன்னதில்லை" என தெரிவித்தார். இதுதொடர்பான செய்திகளும், வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வைரலானது. 

சூர்யாவின் செயலை அறிந்து பலரும் பாராட்டினார்கள். திரையுலக பிரபலங்களும் சூர்யாவை புகழ்ந்து பேசினர். இந்நிலையில், திரெளபதி, ருத்ர தாண்டவம் போன்ற சர்ச்சைக்குரிய படங்களை எடுத்த இயக்குநர் மோகன் ஜி சூர்யா குறித்த வீடியோ ஒன்றை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சூர்யா ஸ்டண்ட் கலைஞர்களுக்கு உதவி செய்யவில்லை என்பது போன்ற செய்தி வெளியாகியுள்ளது.

 டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில், சூர்யா ஸ்டண்ட் கலைஞர்களுக்கு தொடர்ந்து இன்சூரன்ஸ் பணம் கொடுக்கிறார் என்ற செய்தி உண்மையானது. இல்லை. ஆரம்பகாலத்தில் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.2 லட்சம் கொடுத்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை என்று சொல்லலாம். தற்போது அந்த 2 லட்சம் ரூபாயை கொடுப்பதாக தெரியவில்லை என சித்ரா லட்சுமணன் பேசியிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இயக்குநர் மோகன் ஜி இதனை பகிர்ந்து சூர்யா ரசிகர்கள் ஸ்டார்ட் மியூசிக் என பதிவிட்டுள்ளார். வலதுசாரி சிந்தனை கொண்ட மோகன் ஜி சூர்யாவை தற்போது விமர்சித்திருப்பது சர்ச்சையாகி மாறியுள்ளது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ பட பத்திரிகையாளர் சந்திப்பு
விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ பட பத்திரிகையாளர் சந்திப்பு
‘பொலிமேரா 3’ படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடிக்கும் வீராவி கதாபாத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
‘பொலிமேரா 3’ படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடிக்கும் வீராவி கதாபாத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
மறைந்த ஓளிப்பதிவாளர் செழியனின் ‘காகித மலர்’.. டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ஹவுஸ்ஃபுல் காட்சிகள்! 
மறைந்த ஓளிப்பதிவாளர் செழியனின் ‘காகித மலர்’.. டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ஹவுஸ்ஃபுல் காட்சிகள்! 
பவன் கல்யாண் முதல் மாதம்பட்டி ரங்கராஜ் வரை..மனைவிகளிடையே ஒற்றுமை என்ன தெரியுமா?
பவன் கல்யாண் முதல் மாதம்பட்டி ரங்கராஜ் வரை..மனைவிகளிடையே ஒற்றுமை என்ன தெரியுமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: வார்னிங் மட்டுமா? ஆக்‌ஷன் வருமா? பனையூரில் இன்று தவெக MLA-க்கள் கூட்டம் - CM விஜய் ப்ளான்?
வார்னிங் மட்டுமா? ஆக்‌ஷன் வருமா? பனையூரில் இன்று தவெக MLA-க்கள் கூட்டம் - CM விஜய் ப்ளான்?
TN Weather News: உருவாகிறது புதிய புயல்..! இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
உருவாகிறது புதிய புயல்..! இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
"அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்" - தமிழக அரசு மீது இபிஎஸ் காட்டம்!
ஒரே நேரத்தில் 66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - ஏன் தெரியுமா?
ஒரே நேரத்தில் 66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - ஏன் தெரியுமா?
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
"புனித தலத்தில் இப்படியா?" - 1500 வருடப் பழமையான கோயிலுக்குள் செருப்புடன் சென்ற அமைச்சர்!
Embed widget