Asia Cup 2025: துணை கேப்டனாக கில்.. ஸ்ரேயாஸ்-க்கு மீண்டும் வாய்ப்பில்லை.. ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு
Asia Cup 2025 Team India Squad: அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்தது இதில் யஷ்யஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
ஆசியக்கோப்பை 2025:
இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20 - எடிஷன்), அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி தொடருக்கான வீரர்களை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது. இதில் யஷ்யஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்திய அணி விவரம்:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (வி.கே.), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், ஷிவம் துபே, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஜிதேஷ் சர்மா
🚨 #TeamIndia's squad for the #AsiaCup 2025 🔽
— BCCI (@BCCI) August 19, 2025
Surya Kumar Yadav (C), Shubman Gill (VC), Abhishek Sharma, Tilak Varma, Hardik Pandya, Shivam Dube, Axar Patel, Jitesh Sharma (WK), Jasprit Bumrah, Arshdeep Singh, Varun Chakaravarthy, Kuldeep Yadav, Sanju Samson (WK), Harshit Rana,…
அணி எப்படி இருக்கு:
இந்த அணியை பொறுத்தவரையில் அனுபவமும் இளமையும் கலந்த கலவையாக இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. டாப் ஆர்டரில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் உள்ளனர். ஆட்டத்தை கண்ட்ரோல் செய்து ஆடுவதில் துணை கேப்டன் சுப்மன் கில் அனுபவம் பெரிய உதவியாக இருக்கும். அதே போல் மிடில் ஆர்டரில் ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் பட்டேல் ஆகிய அதிரடி ஆல்ரவுண்டர்களும் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி நெருக்கடி தரலாம். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பீரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, ஆகியோர் உள்ளனர்.
ஸ்ரேயாஸ், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு மறுப்பு:
சமீப காலமாக நல்ல ஃபார்மில் உள்ள டெஸ்ட் ஓப்பனரான ஜெய்ஸ்வாலுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை, அதே போல மிடில் ஆர்டர் வீரரான ஸ்ரேயாஸ் ஐயருக்கும் வாய்ப்பு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை, அதே போல தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கும் அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை





















