- தொடங்கியது இறுதிகட்ட நாடாளுமன்ற தேர்தல்: இன்று 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு
மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை (ஜூன் 1) அதாவது இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் மொத்தம் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. உ.பி-பஞ்சாப்பில் அதிகபட்சமாக தலா 13 இடங்களில் தேர்தல் நடைபெறுகிறது. பீகாரில் 8, சண்டிகரில் 1, இமாச்சலப் பிரதேசத்தில் 4, ஜார்க்கண்டில் 3, ஒடிசாவில் 6, பஞ்சாப்பில் 13, உத்தரப் பிரதேசத்தில் 13 மற்றும் மேற்கு வங்கத்தில் 9 இடங்கள் என மொத்தம் 57 தொகுதிகளில் தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க..
- சென்னையில் இன்று குறைந்த வர்த்தக சிலிண்டரின் விலை.. வீட்டு சிலிண்டர் விலையிலும் மாற்றமா..?
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன. அந்த வகையில் வணிக சிலிண்டரை எடுத்துக் கொண்டால் கடந்த 3 மாதத்தில் ஏற்றம் இறக்கமாகவே காணப்படுகிறது. இந்தநிலையில், இன்று ஜூன் 1ம் தேதி என்பதால் வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.70.50 குறைந்துள்ளது. பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.70.50 குறைந்துள்ளது. இதையடுத்து சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ. 1, 840.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் படிக்க..
- வாரணாசி தொகுதியில் வாக்குப்பதிவு.. 3வது நாளாக தியானம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி..
மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை முடித்த பின் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் டெல்லியில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரத்திற்கு வந்தடைந்தார். பின் அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரிக்கு பயணம் மேற்கொண்டார். மாலை 5 மணியளவில் குமரியில் இருக்கும் பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை தொடங்கினார். நேற்று அதிகாலை 5.30 மணி வரை சுமார் 11 மணி நேரம் தொடர் தியானத்தில் ஈடுபட்ட பின், தியான மண்டபத்தில் இருந்து வெளியே வந்து சூரிய உதயத்தை கண்டு வழிபாடு செய்தார். மேலும் படிக்க..
- ADSP வெள்ளத்துரை சஸ்பெண்ட் ரத்து - உள்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
ADSP வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தமிழ்நாடு உள்துறை செயலாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். காவல் துறையில் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை, ஓய்வு பெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, பணி நீக்கம் செய்யப்பட்டது காவல் துறையினர் மத்தியில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தியில் ஜூன் 6, 2013 அன்று ராமு என்கிற (26) என்கிற குமார் என்ற கொக்கி குமார் என்பவர், போலீஸ் காவலில் இருந்த போது மரணமடைந்த வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் படிக்க..
- பாஜகவுக்கு 400 சீட் கிடைக்கும் என்று அடிக்கடி கூறிய ஒருவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதா? உண்மை என்ன?
பாஜகவுக்கு 400 சீட் கிடைக்கும் என்று கூறி கூறி வட இந்தியாவில் பாஜக ஆதரவாளர் ஒருவருக்கு மனநலமே பாதிக்கப்பட்டுவிட்டது என்று ஒரு வீடியோ செய்தி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து வருவது போலவும் அவருக்கு மருத்துவர்கள் என்ன ஆனது என்று தெரியாமல் குழம்பிப் போய் மயக்க மருந்து அளிப்பது போலவும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. மேலும் படிக்க..