கண்குளிர, மனம் குளிர பண அலங்காரத்தில் அருள்பாலித்த அரியலூர் பெரியநாயகி அம்மன்
பண்டிகைகளின் தொடக்க மாதமான ஆடி மாதம் நேற்று 17.7.2025ம் பிறந்தது. அம்மன் வழிபாட்டிற்கு உகந்த இந்த மாதத்தில் ஒவ்வொரு வெள்ளியும், செவ்வாயும் பொன்னான திருவிழா நாட்கள் என்றால் மிகையில்லை.

அரியலூர் மேலத் தெருவில் அருள்பாலிக்கும் பெரியநாயகி அம்மனுக்கு ஆடி முதல் வெள்ளியை ஒட்டி 5 லட்சம் ரூபாய் நோட்டுக்களால் பண அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அம்மனுக்கும் அம்மன் வீற்றிருக்கும் பீடம் மற்றும் சுவர் முழுவதும் பண நோட்டுகளை மாலைகள் போன்றும் சுவர்களை மறைத்தும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
உலகில் உள்ள உயிர்களை காப்பதற்காக அன்னை பராசக்தி பல வடிவங்களில் அவதாரம் எடுத்த மாதம் தான் ஆடி மாதம். அந்த ஆடி மாதத்தில் எல்லா நாட்களும் சிறப்பானவை தான் என்றாலும், ஆடி வெள்ளி மட்டும் எப்போதும் தனிச்சிறப்பு பெற்றது. ஏன் என்றால் இந்த ஆடி வெள்ளியில் அம்மனை வழிபட்டால், எல்லா வளங்களும் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. இந்த ஆடி மாதம் தொடங்கிய அடுத்த நாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பு.

ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோயில்களில் பல்வேறு விழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இவ்வருடம் ஆடிப்பிறந்த இரண்டாம் நாளே ஆடி வெள்ளி வந்ததால் அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல் அரியலூர் நகரில் மேல தெருவில் உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு 5 லட்சம் ரூபாய் புதிய நோட்டுகளில் அம்மனுக்கு பண அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அம்மனுக்கும் அம்மன் வீற்றிருக்கும் பீடம் மற்றும் சுவர் முழுவதும் பண நோட்டுகளை மாலைகள் போன்றும் சுவர்களை மறைத்தும் 500 ரூபாய் 100 ரூபாய் 200 ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இது பக்தர்களை மிகவும் கவர்ந்தது.
ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பெரியநாயகி அம்மனை தரிசனம் செய்தனர். மாலையில் சிறப்பு வழிபாடும் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
பண்டிகைகளின் தொடக்க மாதமான ஆடி மாதம் நேற்று 17.7.2025ம் பிறந்தது. அம்மன் வழிபாட்டிற்கு உகந்த இந்த மாதத்தில் ஒவ்வொரு வெள்ளியும், செவ்வாயும் பொன்னான திருவிழா நாட்கள் என்றால் மிகையில்லை. அம்மனின் அருளை பெறுவதற்கு கூழ் வார்த்தல், நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு படைத்தல், பால் குடம் ஏந்தி வருதல், தீ மிதித்தல் ஆகிய வழிபாடுகளுக்கு பக்தர்கள் தயாராகி வருகின்றனர். கோயில்களில் ஆடி மாத திருவிழாவிற்கான ஏற்பாடுகளை முழுவீச்சில் செய்யத் தொடங்கி உள்ளனர்.
பல்வேறு ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாதத்தில் வரக்கூடிய முக்கியமான விசேஷ நாட்கள் மற்றும் விரத நாட்கள் குறித்த விவரங்களை பார்ப்போம்.
2025 ஆடி மாத விசேஷ நாட்கள் :
ஜூலை 24- ஆடி அமாவாசை
ஜூலை 28- ஆடிப்பூரம், நாக சதுர்த்தி
ஜூலை 29- கருட பஞ்சமி ,நாக பஞ்சமி
ஆகஸ்ட் 03- ஆடிப்பெருக்கு
ஆகஸ்ட் 07- ஆடித்தபசு
ஆகஸ்ட் 08- வரலட்சுமி விரதம். ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் வெள்ளிக்கிழமை என்பதால் அனைத்து அம்மன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.





















