Top 10 News: இந்தியாவில் இலங்கை அதிபர், மீனவர்கள் கண்டனம், சுனாமி எச்சரிக்கை - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

தமிழ்நாட்டுக்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு அலெர்ட்
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது. 12 முதல் 20 செ.மீ வரை மழை பொழியலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ சேவை சீரானது
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் பெறுவதில் சிக்கல். இதனால் காலையில் வேலைக்கு செல்பவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். ஒரு மணி நேரத்திற்கும் பிறகு, சென்னை மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் சேவை சீரானது.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விலகல்
தருமபுரியில் நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல். அரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைவர் இளையராஜா, பொருளாளர் சுரேஷ், துணை செயலாளர் வேடியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகல். மேலும், “கூண்டோடு விலகல் என கருத்தில் உடன்பாடு இல்லை.. ஏனென்றால் தருமபுரியில் நாம் தமிழர் கட்சிக்கு கூண்டே இல்லை” நாதகவில் இருந்து விலகிய நிர்வாகிகள் பேட்டி
தமிழக மீனவர்கள் எதிர்ப்பு
இந்தியா - இலங்கை கடற்படைகள் இன்றும் முதல் 4 நாட்கள் விசாகப்பட்டினத்தில் கூட்டுப் பயிற்சியில்| ஈடுபடவுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு. தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கும் இலங்கை படையுடன் |இந்திய படை கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும் என மீனவர்கள் கண்டனம்
மீண்டும் வேகமெடுக்கும் அமராவதி தலைநகர் திட்டம்
ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்கும் திட்ட பணிகளுக்காக ரூ.24,000 கோடி ஒதுக்கீடு செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய சட்டப்பேரவை கட்டடம், நீதிமன்ற வளாகம், நிர்வாகத்துறை கட்டடம் உள்ளிட்டவற்றை அடுத்த 3 ஆண்டுகளில் அமைக்க முடிவு
இலங்கை அதிபர் உறுதி
“இந்தியாவின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் இலங்கை மண்ணை பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” டெல்லியில் பிரதமர் மோடி உடனான சந்திப்பின்போது இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக உறுதி
ஜார்ஜியாவில் விஷவாயு தாக்கி 12 இந்தியர்கள் உயிரிழப்பு
ஜார்ஜியா நாட்டின் காக்கஸஸ் மண்டலத்தில், பனிப்பிரதேச விடுதி ஒன்றில் பணியாற்றி வந்த 12 இந்தியர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு. மின்சாரம் தடைபட்டதால் ஜெனரேட்டரை பயன்படுத்தியபோது, அதில் இருந்து வெளியேறிய கார்பன் மோனாக்ஸைடு வாயுவை சுவாசித்ததால் அவர்கள் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை தகவல்
நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை
பசிபிக் கடலில் வனுவாட்டு தீவு நாட்டுக்கு 54 கி.மீ தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 7.4ஆக பதிவு. சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மழையால் டெஸ்ட் போட்டி பாதிப்பு
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான, மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி 180 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் சவுதி
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து நியூசிலாந்து வீரர் ஓய்வு பெற்ற டிம் சவுதி. இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் 423 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியுடன் சவுதி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

