Bison First Look : அப்பா பெயரை தூக்கிய துருவ்...மாரி செல்வராஜின் பைசன் பட ஃபர்ஸ்ட் லுக் இதோ
Bison first look : மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

பைசன்
வாழை படத்தின் பெரிய வெற்றிக்குப் பின் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் பைசன். துருவ் விக்ரம் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பரியேறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இன்று மாரி செல்வராஜின் பிறந்த நாளை முன்னிட்டு பைசன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியும்
— Mari Selvaraj (@mari_selvaraj) March 7, 2025
ஏன் வருகிறேன் என்றும்
உனக்கு தெரியும்
வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்கு தெரியும்
ஆதலால் ….
நீ கதவுகளை அடைக்கிறாய்
நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன். 🦬
—
பைசன் (காளமாடன்)#BisonKaalamaadan 🦬@applausesocial… pic.twitter.com/8ACSMdys4B
அப்பா பெயரை தூக்கிய துருவ்
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான ஆதித்யா வர்மா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் . தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய மகான் திரைப்படத்தில் அப்பாவும் மகனும் சேர்ந்து நடித்தார்கள் துருவ் விக்ரம் என இவரை அனைவரும் அடையாளப்படுத்தி வந்த நிலையில் தற்போது பைசன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வெறும் துருவ் என்று மட்டுமே இடம்பெற்றுள்ளது. சினிமாவில் நெப்போடிஸம் பற்றி விமர்சனங்களை தவிர்க்க அல்லது தனது அப்பாவின் அடையாளத்தை வைத்து பப்ளிசிட்டி வேண்டாம் என்கிற எண்ணத்தில் அவர் விக்ரமின் பெயரை நீக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.





















