கண்டிஷனுக்கு ஒத்துவராத காதலன்...பிரெக் அப் என்று ஒரே போடாய் போட்ட தமன்னா
நடிகை தமன்னா மற்றும் விஜய் வர்மாவுக்கு பிரேக் அப் ஆகிவிட்டதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் பிரேக் ஆனதற்கான காரணம் தெரியவந்துள்ளது

தமன்னா விஜய் வர்மா பிரேக் அப்
நடிகை தமன்னா மற்றும் இந்தி நடிகர் கடந்த ஆண்டு முதல் காதலித்து வருகிறார்கள். இருவரின் காதல் பற்றி முதலில் தகவல் வெளியானாலும் இதுகுறித்து அவர்கள் வெளிப்படையான மனம் திறந்து பேச் தயங்கினார்கள். பின் நடிகர் விஜய் வர்மா இருவரின் காதலை உறுதிபடுத்தினார். கடந்த இருபது ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து வரும் தமன்னா முன்னதாக சில காதல் உறவுகள் இந்து வெளியேறியிருக்கிறார். அந்த வகையில் விஜய் வர்மாவுடனான காதல் திருமணம் வரை செல்லும் என அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் இருவருக்கும் பிரேக் அப் ஆகிவிட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இந்த தகவல்களை உறுதிபடுத்தியுள்ளது. எதனால் இருவரும் பிரிந்தார்கள் என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வந்த நிலையில் தற்போது இதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க : இளம் நடிகைகளை ஓரம்கட்டிய 57 வயது நடிகை...உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா ?
காதலனுக்கு கண்டிஷன் போட்ட தமன்னா
தமன்னாவுக்கு தற்போது 35 வயதாகிறது. முன்னணி நடிகையாக இருந்து தற்போது ஓடிடி தளங்களில் நடித்து வருகிறார் தமன்னா. சில படங்களில் சிறப்புத் தோற்றத்தில் பாடல்களில் நடனமாடி வருகிறார். திருமணம் செய்துகொள்ள இதுவே சரியான நேரம் என தமன்னா நினைத்திருக்கிறார். இதனை தன் காதலனிடம் அவர் சொல்ல விஜய் வர்மா இன்னும் சில ஆண்டுகள் கழித்து திருமணன் செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பரஸ்பரம் பிரிய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காதல் பிரிந்தாலும் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது
இதையும் படிங்க : " நீ நடிக்க கூடாது" மகேஷ் பாபுவா இப்படி சொன்னது...அதிர்ச்சியை கிளப்பிய மனைவி நம்ரதா

