மேலும் அறிய

IND vs NZ: 25 வருட வலி! இந்தியாவை கதறவிடும் நியூசிலாந்து.. நேருக்கு நேர் எப்படி?

Ind vs NZ : ஐசிசியின் தொடர்களில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மொத்தம் 16 முறை நேருக்கு மோதியுள்ளன, இதில் நியூசிலாந்து அணி 10 முறையும் இந்திய அணி 5 முறையும் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி துபாயில் மோதவுள்ளது. என்ன தான் இந்திய அணி நியூசிலாந்து அணியை லீக் போட்டியில் வீழ்த்தி இருந்தாலும் ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்து அணியின் கையே ஓங்கி இருக்கிறது. இரு அணிகளின் மோதல்கள் குறித்து கீழே காண்போம்.

சாம்பியன்ஸ் டிராபி 2025:

பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது, மொத்தம் 8 அணிகள்  இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. இதில் குரூப் ஏ-வில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிப்பெற்றது. குரூப்-பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தகுதிப்பெற்றன. 

இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடர்ச்சியாக மூன்று முறை சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியை எட்டிய முதல் அணி என்கிற வரலாறு படைத்தது.  நியூசிலாந்து அணி தங்களது அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்து ஆதிக்கம்:

ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் இந்தியாவும் நியூசிலாந்தும் நான்கு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன, இதில் நியூசிலாந்து அணி முன்னணியில் உள்ளது. நியூசிலாந்து 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இரு அணிகளும் 2000 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியிலும், 2019 மற்றும் 2023 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும், 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் நேருக்கு நேர் மோதியுள்ளனர். 2023 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை வென்றுள்ளது. இது தான் நியூசிலாந்து அணியை இந்திய அணியை நாக் அவுட்டில் வென்ற ஒரே போட்டியாகும். 

2021 ஆம் ஆண்டு நடந்த உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. 

சாம்பியன்ஸ் டிராபி- நேருக்கு நேர்: 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் இந்தியாவும் நியூசிலாந்தும் இது வரை இரண்டு முறை மோதியுள்ளன.அதில் இரு  அணிகளும் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இந்திய அணி 2000 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதியது, இதில் நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன் பின்னர் தற்போது நடந்த லீக் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வெற்றி பெற்றது இருந்தது. 

நேருக்கு நேர் மோதல் - 2

இந்தியா - 1 

நியூசிலாந்து - 1 

இதையும் படிங்க: Rohit Sharma: தலைக்கு மேல் கத்தி..! கப் அடிச்சா கேப்டன்சி, இல்லன்னா வீட்டுக்கு தான் - ரோகித் சாதிப்பாரா?

ஐசிசி ஒரு நாள் போட்டிகளில் எப்படி? 

ஒரு நாள் உலகக்கோப்பை போட்டிகளை பொறுத்தவரை இரு அணிகளும் 10 முறை மோதியுள்ளது, இதில் நியூசிலாந்து 5 முறையும் இந்திய அணி 4 முறையும் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது, இதில் குறிப்பாக 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  அந்த போட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனியின் கடைசி ஒரு நாள் போட்டியாக அமைந்தது. அதற்கு பழிதீர்க்கும் விதமாக 2023 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி அதற்கு பழிதீர்த்துக்கொண்டது. 

நேருக்கு நேர் போட்டிகள் - 10 

நியூசிலாந்து - 5-ல் வெற்றி

இந்தியா - 4-ல் வெற்றி

முடிவு இல்லை - 1

இதையும் படிங்க: IND vs NZ Final: கால் நூற்றாண்டு பகை! 25 ஆண்டு கழித்து பழிதீர்க்குமா இந்தியா? 2000ல் நடந்தது என்ன?

டி20 உலகக் கோப்பையில் இந்தியா vs நியூசிலாந்து:

ஐசிசி  டி20 உலகக் கோப்பை போட்டிகளில் நியூசிலாந்து இந்தியாவை ஆதிக்கம் செலுத்தி வருகிறது, இது  இரு அணிகளும் மூன்று முறை மோதியுள்ளன அந்த மூன்று போட்டிகளிலும் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது. 2007 ஆம் ஆண்டு நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து  10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடந்த போட்டிகளில், நியூசிலாந்து அணி எளிதில் வெற்றி பெற்றது, , இதில் 2016 இல் 47 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியும், 2021 இல் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. 

நேருக்கு நேர் போட்டிகள் - 3

நியூசிலாந்து - 3-ல் வெற்றி

இந்தியா - 0

ஒட்டுமொத்தமாக இரு அணிகளும் ஐசிசியின் தொடர்களில் மொத்தம் 16 முறை நேருக்கு மோதியுள்ளன, இதில் நியூசிலாந்து அணி 10 முறையும் இந்திய அணி 5 முறையும் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதன் மூலம் ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு பெரும் தலைவலியாகவே  இருந்துள்ளது. இந்திய அணி எப்படி நியூசிலாந்தை எதிர்க்கொண்டு இறுதிப்போட்டியில் வெற்றி போகிறது பொருத்து இருந்து தான் பார்க்கவேண்டும்

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
Sooryavanshi: இனி நான்தான் ஓப்பனர்.. சூறாவளி பேட்டிங்கால் சுளுக்கெடுக்கும் சூர்யவன்ஷி!
Sooryavanshi: இனி நான்தான் ஓப்பனர்.. சூறாவளி பேட்டிங்கால் சுளுக்கெடுக்கும் சூர்யவன்ஷி!
IND vs ZIM: கேப்டனாக முதன்முறையாக தொடரை வெல்வாரா ஸ்ரேயாஸ்? ஜிம்பாப்வேயுடன் இன்று மீண்டும் மோதல்!
IND vs ZIM: கேப்டனாக முதன்முறையாக தொடரை வெல்வாரா ஸ்ரேயாஸ்? ஜிம்பாப்வேயுடன் இன்று மீண்டும் மோதல்!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Embed widget